பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அப்பர் தேவார அமுது

ஆற்றிலுள்ள நீரைக் குடித்தாலும் குளத்திலுள்ள நீரைக் குடித்தாலும் குடத்தில் உள்ளதைப் பருகினலும் தாகம் தீர்வது என்பது பொதுவான அநுபவம்.

இறைவன் அவ்வாறே வெவ்வேறு அன்பர்களுக்கு வெவ் வேறு நிலையில் தோற்றமளித்து அருள் புரிகிருன். ஒருவருக் குச் சிவபெருமானக வந்தருளுவான்; மற்ருெருவருக்குத் திருமாலாக வந்து அருள்புரிவான்.

ஒரே ஆற்றிலிருந்து பலர் தண்ணிர் கொண்டு வந்து வீட்டில் வைக்கிருர்கள். குடத்திலும் பானையிலும் கூஜாவிலும் கிண்ணத்திலும் அந்த நீரை நிரப்புகிருர்கள். கூஜாத்தண்ணீ ரைக் குடிக்கிறவன் அதைக் கூஜாத் தண்ணீர் என்பான். பானை நீரைப் பருகிறவன் அதைப் பானைத் தண்ணிர் என் பான். இருக்கும் பாத்திரங்கள் வேறுபடுகின்றனவேயன்றி நீர் வேறுபடுவதில்லை. அவ்வாறே சிவபெருமான் என்ருலும் திருமால் என்ருலும் வேறு வகையில் சொன்னலும் பரம் பொருள் ஒன்றுதான். அதன் வடிவத்தைக் கண்டு, இது வேறு: அது வேறு என்பவர்கள் மெய்ப்பொருளை உணராதவர்கள்.

அப்பர் சுவாமிகள் அந்தப் பரம்பொருளைச் சிவபெரு மாளுகக் கண்டு அருள் பெற்றவர். அவருக்குப் பரம்பொருள் என்ருல் சிவபெருமானே நினைவுக்கு வருகிருர், பானைத் தண்ணீரைக் குடித்தே பழகியவனுக்குத் தண்ணிரை நினைக் கும்போதெல்லாம் பானையே நினைவுக்கு வருவது போல, உபாசகர்கள் பரம்பொருள் என்ருல் தாம் வழிபடும் கடவுள் வடிவத்தையே நினைப்பார்கள்.

திருநாவுக்க ரசர் தாம் உணர்ந்த பரம்பொருளின் வடிவத் தைச் சொல்கிருர். அவர் பரம்பொருளைச் சிவபெருமாகைக் கண்டவர். பரம்பொருள் எப்படி இருக்கும் என்று அவரைக் கேட்டால் தாம் தரிசித்த வடிவத்தையே அடையாளம் காட்டு கிருர், ו