களின் திருவாக்கின் பெருமையை அறிய இந்த விளக்கங்கள் ஒரளவு உதவுமென்று நம்புகிறேன்.
வேத சாத்திரங்களை நன்கு பயின்றார் இவற்றின் கருத்தை விளக்கப் புகுந்தால் இன்னும் நன்ருக விளக்கக் கூடும். என்ருலும் என் அறிவளவுக்குப் புலப்பட்டவற்றை இந்தக் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.
தமிழுலகம் ஏற்கும் என்ற நம்பிக்கையுடன் இவற்றை எழுதினேன்.
தேவாரத்தைப் பல நாள் பாராயணம் செய்து அதில் உள்ள திருப்பாடல்களில் ஆழங்காற்பட்டு இன்புற்றவர்கள் என்னுடைய ஆசிரியப் பெருந்தகையாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள். அவற்றைப் பாரா யணம் பண்ணுகையில் கண்ணீர் மல்க இருப்பார்கள். அவர்களுடைய திருவடி நிழலில் இருந்து தமிழ் கற்ற எளியேனுக்கும் ஒரளவு அந்தப் பழக்கம் அமைந்தது. அதன் பயனாகவே இந்தக் கட்டுரைகளை எழுதும் முயற்சியை மேற்கொண்டேன். முருகன் திருவருளும் என் ஆசிரியப் பெருமானுடைய ஆசியும் இந்த முயற்சிக்கு உரம் தந்தன. உயிருக்கு நலம் செய்கிற அமுதைப் போல உதவும் இப்பாடல்கள் சிந்தையில் வைப்பதற்குரியவை; பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து ஆய்வதற்கு ஏற்றவை; நம் வாழ்க்கையில் பக்தி உணர்வையும் நன்னெறியிற் செல்லும் முறையையும் தெரிவிப்பவை,
அப்பர் சுவாமிகள் திருநாமம் வாழ்க !
“காந்தமலை
சென்னை-28 -
கி. வா. ஜகந்நாதன்
15–10–1980 .