பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ந்நின்றவர்க்கு மெய்யர் 65

அந்தப் பரம்பொருள் அவருக்கு எவ்வாறு காட்சி அளித்தது? அவர் சொல்வதைக் கேட்கலாம்.

சிவபெருமாகைக் காட்சி அளித்த அந்தப் பரம்பொருள் ஒரே சிவப்பு நிறம் படைத்தது.

செய்யர்.

அந்த வடிவத்தின் திருமார்பில் வெண்ணுரல் இலங்கு கிறது.

வெண்ணுலர்.

அவர் தம் திருக்கரத்தில் கரிய மான்குட்டியை ஏந்தியிருக் கிருர். அது துள்ளிக் கொண்டு காட்சி அளிக்கிறது.

கருமான் மறி துள்ளும் கையர்.

வெண்ணுரலைச் சொன்னவுடன் அதற்கு மாருகக் கருநிறம் கொண்ட மான்மறி நினைவுக்கு வருகிறது. இரண்டுக்கும் பளிச்சென்று வேறுபாடு தெரியும் அல்லவா? -

அந்த வடிவத்தின் கையைப் பார்த்தவர் பிறகு தாம் புகல் புகுவதற்குரிய திருவடியைக் காண்கிருர். பல வீரச் செயல்களைப் புரிந்த அந்தத் திருவடியில் அதற்கு அடையாள மாக ஒலிக்கும் வீரக்கழல் தோன்றுகிறது.

கன கழல் கட்டிய காலினர்.

இப்படித் தோற்றம் அளிக்கிறவர் அந்தத் தோற்றம் மறைந்தால் அவரும் மறைந்து விடுவாரா? மனிதன் உடம்பு போளுல் மறைவது போல மறைவாரா? இல்லை. அவர் என்றும் உள்ள பொருள். நாம் காணும் பிரபஞ்சப் பொருள்கள் நிலையில்லாமல் மறைந்து போகின்றன. யாவும் மறைந்து