பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ந்நின்றவர்க்கு மெய்யர் 69

தாருகாவனத்து முனிவர்கள் விட்ட கரிய மானைப் பிடித் துத் தம் கையில் எந்திக்கொண்டிருக்கிரும். அது முன் கால்கள் இரண்டையும் தூக்கிக் கொண்டு துள்ளுகிறது. அதனல், ‘மறி துள்ளும் கையர் என்கிருர், நம்முடைய மனமாகிய மான், பிரபஞ்ச வாசனையில் அகப்பட்டுத் துள்ளிக்கொண்டிருக்கிறது. அது இறைவன் வசப்பட்டுவிட்டால் அது துள்ளிலுைம் அவனு டைய தொடர்பு அருமலே இருக்கும் என்பதை இது புலப் படுத்துகிறது.

கனே கழல்-ஒலிக்கும் வீரகண்டை வீரர்கள் தம் விர, செயல்களுக்கு அறிகுறியாக முழங்காலுக்குக் கீழே கழலே அணிவார்கள். சிவபெருமான் பல வீரச்செயல்கள் புரிந்தவ ராதலின், கன சூழல் கட்டிய காலினராக இருக்கிருர், மெய்ந்நின்றவர்க்கே என்ற ஏகாரம் தொக்கது. அல்லாதவர் - மெய்ந்நெறியில் நில்லாதவர்கள்; பொய்ந்நெறியில் செல்கிற வர்கள். 'பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி' என்பது திருவாசகம், புகலூர்ப் புரிசடையார் எழுவாய்.)

அப்பர் சுவாமிகள் பாடிய இந்தத் திருப்பாடல் நான்காம் திருமுறையில் 16-ஆவது பதிகத்தில் உள்ள முதற் பாடல்.