பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அப்பர் தேவார அமுது

மாலையுமாக விளங்குவன; அவருடைய செம்மையான திருவடி களைக் காலையில் எழுந்தவுடனும் மாலையில் உறங்குவதற்குமுன் னும் கை தொழுது தியானிப்பவர் மனமே சிறந்த ஆலயம் ஆகும். *

(பால் நிலவுக்கு உவமை. கண்ணி-அடையாள மாலை ; 'கண்ணி கார்நறுங் கொன்றை” என்பது அகநானூறு, கையி ல்ை தொழுவது காலையிலும் மாலையிலும் ஆலுைம் மனம் எந்த நேரமும் அவரையே நினைக்கும். கை தொழும்பொழுது அதனைப் பிறரும் பார்க்கலாம். ஆனல் எந்த நேரத்திலும் நினைப்பதை அந்த நிலையை உணர்ந்தவர்களே தெளிவார்கள். அப்பர் சுவாமிகள் அந்த நிலையில் நிற்பவர்; ஆகவே தம்மை யொத்த அன்பர்களின் இயல்பையும் உணர்ந்தவர். ஏகாரம், ஈற்றசை.

இவ்வாறு உறங்குவதற்கு முன்னும் கைதொழுது, விழிக் கும்பொழுதும் கைதொழுதுவாழும் அடியவர்கள் நீண்ட உறக்க மாகிய மரணம் நேரும்போது இறைவருடைய நினைவோடே இருப்பார்கள். அவர்கள் பிறக்க நேர்ந்தால் அப்போதும் அந்த நினைவு அவர்களிடம் தொடர்ந்து வரும்.

'உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு'

என்பது குறள்.)

நான்காம் திருமுறையில் பதினேழாம் திருப்பதிகத்தில் எட்டாவது பாட்டாக விளங்குவது இது.