பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அப்பர் தேவசர அமுது

நிலையாக நிற்கும் பெருமானுமாகிய சிவபிரான நான் கண்ட இடம் திருவாரூர் ஆகும். *

('நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை ஆதலின் நெஞ்சில் வஞ்சனை உடையார் புறத்தே அது இல்லாதுபோலக் காட்டுவார். அத்தகைய வேடதாரிகளிடத்தில் இறைவன் சேரமாட்டான்.

ஆர்பாடும் - யாரிடத்தும். சாராத - அடைந்து அருள் புரியாத மைந்தனை-வலிமையுடையவன: இளைய திருவுருவம் உடையவனே என்றும் கொள்ளலாம். துஞ்சு - உறங்கும். யாவரும் உறங்கும் இருள், நள்ளிருள். அப்போது நடனமிடு தல் இறைவனுக்கு உகப்பானது; “நள்ளிருளில் நட்டம் பயின் ருடும் நாதனே' என்பது திருவாசகம். இருள் என்றது அறியா மையை. கூரும்பொழுது-மெல்லப் புகுந்து மிகுந்து வரும் சமயத்தில், நிலாப் பாரித்து - நிலவைப் பரப்பி; தன்னுடைய தண்மையான அருளைப் பரப்புவதைக் குறித்தது. அஞ்சுடராய்அழகிய சுடராய். வெம்மையுடையது கதிரவன் என்னும் சுடர்; அக்கினியும் அத்தகையதே; சந்திரனே தேய்தலும் மறை வதும் உடையவன். இறைவனே இவை யாவும் இல்லாமல் எல்லாச் சுடர்களுக்கும் மேலாக விளங்கும் சுடர். அதனுல் அவனைப் பரஞ்சுடர் என்பார்கள். நின்ருனை-அகலாமல் நிலைத்து நின்றவனே. கண்டது - கண்டு அவன் இயல்பை அறிந்து கொண்ட இடம். ஏகாரம், ஈற்றசை.) -

இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 19-ஆம் பதி கத்தில் எட்டாவது திருப்பாட்டாக உள்ளது.