பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை உடையேன்? 81

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும். எம்பெருமானைத் தரி சித்த பொழுது அவருக்கு இந்தப் பெருமித உணர்வு தோன்றி யது. இறைவன் எழுந்தருளியிருப்பதல்ை திருவாரூர் வளம் பெற்று விளங்குகிறது. அப்பர் காலத்தில் இருந்த திருவாரூர் அப்படி இருந்தது.

அந்த ஊருக்குச் சென்றவர்கள் இனிய கனிகளை அருந்தி இன்புறலாம்; பசியாறலாம். எங்கே பார்த்தாலும் தோப்பு களும் பூம்பொழில்களும் நிறைந்திருக்கின்றன. மரங்களுக்குள் மிக ஓங்கி வளர்ந்திருக்கும் தென்ன மரங்கள் அந்த ஊரில் நிலவளத்துக்கு அடையாளமாக இருக்கின்றன. :

ஓங்கு தெங்கு.

தன் மட்டைகளை விரித்துக் கொண்டு காண்பதற்கு அழகாகக் கமுக மரங்கள் நிற்கின்றன.

இலையார் கழுகு.

அங்கங்கே வாழைத் தோட்டங்கள் உள்ளன. இன்னும் அவற்றின் குலைகள் முதிர்ச்சி பெறவில்லை. ஆகையால் அவை வெட்டப்படாமல் நிற்கின்றன. அவை குலை முதிர்ந்தவை

அல்ல; இளவாழை,

இள வாழை.

தெங்கும் கமுகும் வாழையும் ஒருபால் வளர, பின்னும் ஒரு பால் மாமரங்கள் தழைத்துக் கனியின்று நிற்கின்றன. ஒருபால் மாதுள மரங்கள் கொத்துக் கொத்தாகப் பழங்கள்ை ஈன்று விளங்குகின்றன. இந்த மரங்கள் ஒருவர் முயன்று பறிக்க வேண்டாதபடி பல பழங்களைத் தாமே சிதறுகின்றன. முயற்சி இல்லாமலே எளிதில் பெற்று உண்ணும் வகையில் அவை உள்ளன. இறைவன் திருவருள் மலிந்த இடத்தில் வருத்த மில்லாமலே எல்லாப் பயன்களும் எளிதில் கிடைக்கும் என்பதை அவை காட்டிக்கொண்டு நிற்கின்றன.