பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அனைத்திலும் இலயம்

திருநாவுக்கரசர் தில்லைக்குச் சென்ருர். அங்கே திருச் சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானத் தரிசித்தார். "நீ இங்கே எதற்கு வந்தாய்): என்று இறைவன் கேட்பது போலத் தோன்றியது. அவனு - டைய திருக்கரத்தின் குறிப்பு இதுபோலும் என்று அவர் எண்ணினர். அந்த விளுவுக்கு விடை சொல்வதுபோல ஒரு திருப்பாடலைச் சொல்கிருர்,

'இறைவனே, என்னிடம் ஒருவர் இருக்கிருர், அவர் என்ளுேடு ஒட்டி வாழ்கிறர். தாம் போகும் வழியெல்லாம் என்னை இழுத்தடிக்கிருர். நல்ல வழிகளில் ஈர்த்துச் சென்ருல் எனக்குத் துன்பம் இல்லை. அவரோ மாட்சியில்லாத புன்னெறி களில் திகைப்படையும்படி என்னை இழுத்துச் சென்று, தம் விரும்பம் கைகூடியவரைப்போல முழக்கம் செய்கிருர். நீ என்னை மடக்கிவிட்டுப் போகவா பார்க்கிருய்? உன்னை அப்ப டிப் போக விடுவேன? மேட்டிலும் பள்ளத்திலும், காட்டிலும் புதரிலும், அழுக்கான இடங்களிலும், நாற்றமுள்ள பிரதேசங் களிலும் உன்னை இழுத்துச் சென்று கதற அடிக்கிறேன், பார்’ என்ற நினைவோடு செயல் செய்வாரைப் போல அவர் என்னே அலைக்கழிக்கிருர். நான் அவருடைய கைக்குள் அகப்பட்டுத் தடுமாறுகிறேன். நான் என்செய்வேன்!” -

மனத்தினர் திகைத்து நாளும்

மாண்பு அலா நெறிகள் மேலே கனைப்பரால்; என்செய்கேனே?

'இந்தத் தொல்லையினின்றும் நீங்கி உய்வேனே என்ற ஏக்கம் எனக்கு உண்டாகிவிட்டது. உலகிலுள்ள யாரிடமாவது