பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்திலும் இலயம் 87 என்று உணர்ந்து மகிழ்ந்தேன். 'எல்லையை அணுகும்போதே இந்த நன்மை கிடைக்குமானல் தில்லையுட்புகுந்தால் எத்துண்ை இன்பம் கிடைக்கும்! ஆகவே இதுவே நாம் புகல் புகவேண்டிய இடம் என்று தெளிந்தேன். தில்லைக்குள் புகுந்தேன். நின் நடன அரங்காகிய திருச்சிற்றம்பலத்துக்கு வந்து தரிசித்

தேன்.”

'தரிசித்த பிறகு மீண்டும் புறப்பட்டு உன் இடத்துக்குச் செல்லலாமே!”

'ருசிகண்ட பூனை உறியை எட்டி எட்டித் தாவும் என் பார்கள். மனத்தினர் அடங்குவாரா என்று ஏங்கிக் கிடந்த எனக்கு அவர் தம் குறும்புகளை அடக்கிக் கொள்வதை உணர்ந்தபோது, இதை விட்டுப் போக எண்ணம் தோன்றுமா? இங்கே வந்தபிறகு உண்டான அமைதியை இழந்துவிட முடியுமா? அது மட்டும் அன்று. பெரியவர்கள் ஒன்று சொன் ஞர்கள். உன்னுடைய ஆடலின் பெருமையைச் சொன்னுர்கள். நீ எப்போதும் தாள அமைதியோடு நடனம் செய்வதால்தான் உலகமே நடைபெறுகிறது என்று கூறினர்கள். அந்த உண்மையை உணரவேண்டும் என்ற உறுதி எனக்கு உண்டாயிற்று.”

“தாளத்திற்கும் உலகம் நடப்பதற்கும் என்ன தொடர்பு?,

'உடம்பில் இதயம் துடிக்கிறது. நீ அங்கேயும் இருந்து நடனமிடுகிருய். உன்னுடைய ஆடல் நிற்குமாயின் இதயத் துடிப்பும் நின்றுவிடும். உலகில் உள்ள உயிர்க் கூட்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீ இலயத்துக்கு ஏற்றபடி ஆடுவதனுல்தான் அவை இயங்குகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்னும் பஞ்ச கிருத்தியங்களையும் நடத்தும் தலைவன் என்பதை உன் நடனமே காட்டுகிறது. நீ நடனம் ஒழிந்தால் உயிர்களின் இயக்கம் நின்றுவிடும். இங்கே நான் காணும் இலயமே எல்லா உயிர் களிடத்திலும் இதயத் துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும்