பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அப்பர் தேவார அமுது

கருவி கரணங்கள் தொழிற்படுவதையும் நடத்துகிறது. நின் ஆடலும்,அதன் இலயமும் நின்ருல் எல்லாரும் செயலொழிந்து போவார்கள். உலகமே பிணக்காடு ஆகிவிடும். உடம்புக்குள் உயிர் இருந்து அதை நடத்துகிறது. ஆல்ை உயிருக்குள்ளும் உயிராக இருந்து நீ தானே எல்லாவற்றையும் இயக்குகிருய்? உன்னுடைய ஆடலின் தாளம் சீராக அமைந்திருக்கிறது. தப்புத்தாளம் போடுவதில்லை. அதல்ை உலகம் ஒரு வரை யறைக்குள் நின்று செயற்படுகிறது. கதிரவன் உரிய நேரத்தில் தோன்றி மறைகிருன். சந்திரன் தன் நியதிப்படி ஒளி விடுகிருன். தீயானது தன் தொழிலைச் செய்கிறது. பஞ்ச பூதங்களும் இந்த இலயந்தினுல் இயங்குகின்றன. உலகமே முறையாகச் சுழல்கிறது. நவக்கிரகங்கள் இயங்குகின்றன. தேவர்கள் தமக்குரிய கடமைகளை ஆற்றி வருகிருர்கள், எல்லாவற்றுக்கும் மூலசக்தியாக உன்னுடைய ஆடலின் இலயம் இருக்கிறது. அது நின்ருல் யாவும் ஒடுங்குதலாகிய இலயத்தைத்தான் அடையும். அனைத்துப் பொருளிலும் உன் னுடைய ஆடலின் இலயம் எதிர் ஒலிக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்காக அடியனேன் இங்கே வந்து உன்னைத் தரிசித்தேன்.'

இப்படியெல்லாம் விரித்துப் பொருள் செய்யும் வண்ணம் அப்பர் சுவாமிகள் பாடுகிருர்,

மனத்தினர் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே களைப்பரால்; என்செய் கேளுே! கறைஅணி கண்டத் தானே. தினைத்தனை வேதம் குன்ருத்

தில்லைச்சிற் றம்ப லத்தே அனைத்தும்கின் இலயம் காண்பான்

அடியனேன் வந்த வாறே.

அடியேனுடைய மனமானது இன்னது செய்தால் நல்லது என்பதை உணராமல் மயங்கி நாள்தோறும் பெருமை: