பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அப்பர் தேவார அமுது

காது. அவர்களே அத்தகைய இயல்பு பெற்றிருக்கும்போது அவர்களை ஆட்கொண்டவரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஒரு சமயம் காமன் தன் கரும்பு வில்லிைேடும் ஐந்து மல சம்புகளோடும் அவர்முன் வந்தான். ஒரு கணம் நின்ருன். அவர்மேல் அம்பு எய்ய வந்தவன் அவன். அவர் அவனே எதிர்க்கவில்லை. அவனே அவர் சும்மா பார்த்தார். அவ்வளவு தான். உடனே அவன் வெந்து பொடி சாம்பலாய் உதிர்ந்து விட்டான்.

காமன் என்னும் வில்லி ஜங்கனையினை வெந்து உக நோக்கியிட்டார்.

எல்லோரையும் தன் கணையில்ை எய்து காமம் கொள்ளும் படி செய்து பழகிய அவன் அந்த ஒருவர்முன் ஒன்றும் செய்ய முடியவில்லை; சாம்பலாகி விட்டான்.

இப்படிச் செய்தவர் தம் அன்பர்கள் தரிசித்து மகிழும்படி உலகத்தில் பல தலங்களில் மூர்த்திகரித்து எழுந்தருளியிருக் கிருர். திருவதிகை வீரட்டம் என்ற தலம் ஒன்று உண்டு. அப்பர் சுவாமிகள் அருள்பெற்ற திருத்தலம் அது. அங்கே நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக உண்டு. அல்லி மலர்கள் வயல்களில் மலர்ந்து அழகுற விளங்கும். திருவதிகையைச் சுற்றி எல்லே கோலினுற் போல இந்த வயல்கள் இருக்கும். அங்கே எழுந்தருளிய வீரட்டனரே இத்தகையவர். திரு வதிகை வீரட்டம் என்பது திருக்கோயிலின் பெயர். அட்ட வீரட்டங்களில் ஒன்று அது.

அல்லியம் பழன வேலி அதிகை வீரட்டனரே.

சிவபெருமான் தொண்டர்களின் உள்ளத்தையே கோயி லாகக் கொண்டு விளங்குபவர். அவர் அருள் சார்ந்த இடத்