பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் உறங்கும் தொண்டர் 93

தில் காமனுடைய அம்பு புகாது. இந்தக் கருத்துக்களை இந்தப் பாட்டில் காணலாம்.

எல்வியும் பகலும் எல்லாம்

துஞ்சுவோர்க்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில்

புக்கனர்; காமன் என்னும் வில்லிஐங் கணையி குன

வெந்துக கோக்கி யிட்டார்; அல்லிஅம் பழன வேலி

அதிகைவீ ரட்ட குரே. * இரவிலும் பகலிலும் எல்லாக் காலத்திலும் புறநோக்கம் இன்றி உண்முகப்பட்டு உறங்கும் அன்பர்களிடம் ஒருவர் வந்து தம்மைத் தியானித்துத் தழுவிய அவர்களுடைய மன மாகிய கோயிலில் புகுந்தனர்; அவரே காமன் என்னும் கரும்பு வில்லையுடையவனும் ஐந்து மலரம்புகளை உடையவனுமாகிய வனேச் சாம்பலாக வெந்து உதிரும்படி தம் திருக்கண்களால் பார்த்தார். அவர் யார் என்னின், அவரே அல்லி மலர்கள் சூழ்ந்த அழகிய வயல்களை எல்லையாக உடைய திருவதிகை வீரட்டம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர்."

(எல்லி - இரவு. துஞ்சுவோர்க்கு - உறங்குபவர்களிடம்: உருபு மயக்கம். அவ்வாறு உறங்குவோரிடம் இறைவர் தாமே வந்து அவர் மனத்துட் புகுந்தார். புல்லிய - தழுவிய, இடைவிடாது தியானித்ததைக் குறித்தபடி; தழுவுதலாவது சார்ந்து நிற்றல். மனத்துக் கோயில் - மனமாகிய கோயில்; அத்து, வேண்டாவழிச் சாரியை. வில்லி - கரும்பு வில்லையுடை யவன். வில்லியாகிய கணையினை, வெந்து உக எரிந்து பொடியாக உதிரும்படி, நோக்கியிட்டார் - நோக்கினர்; இடு: பொருளற்ற துணைவினை. அல்லி-அல்லி மலர். வேலி - எல்லை. ஏகாரம், ஈற்றசை.)

இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 25-ஆம் பதி. கத்தில் 8-ஆவதாக உள்ளது. .