பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருவடிக் காட்சி

இறைவனுடைய திருவடியைத் தரிசித்து இன்புற்ற அடியவர்கள் பக்தியில் முறுகி நின்று அந்தத் திருவடியை நேரிலே கண்டு மகிழ வேணடும். எனற பேரார்வத்தைப் பெறு வார்கள். வெளியிலே இறைவனுடைய திருவடியைப் பலகாலும் தரிசித்துப் பின்பு அகத்திலே அந்தத் திருவடியை வைத்துத் தியானிப்பார்கள். அப்பால் அந்தத் திருவடியை உண்மையான வடிவத்திலே காணவேண்டும் என்று ஏங்கி நிற்பார்கள்.

திருவடியை அதன் இயல்பான வ டி வ த் தி லே கண்டவர்கள் அதன் அழகிலே ஈடுபட்டு எப்போதும் அதைக் காணுவதிலே லயித்துப் போய்விடுவார்கள். இந்த லயம் தமக்கு வரவேண்டுமென்று அப்பர் சுவாமிகள் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடம் விண்ணப் பித்துக் கொள்கிருர்.

நல்லவர்கள் விரும்பும் பொருள் அவன். இவ்வுலகில் எத்தனை போக போக்கியங்கள் இருந்தாலும் அவை நிலை யானவை அல்ல என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அடியவர்கள். ஆகவே அவற்றில் மனம் வையாமல் இறைவ னுடைய திருவடி தரிசனத்தையே தம் லட்சியமாகக் கொண்டு சாதனை செய்து வருவார்கள். தன்னை உணரப் புகுந்தவர் களுக்கெல்லாம், காணவேண்டும் என்ற விருப்பத்தை உண் டாக்குகிறவன் அவன்.

கம்பனே!

யவர்களுக்கு அவனே தலைவன்; தன் அருளாட்சியில் அவர்களே ஈடுபடுத்தி ஆளும் வேந்தன்.

எங்கள் கோவே!