பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈழநாட்டிலிருந்து குடியேறியவரும் அல்லர். ஈழநாட்டுத் தமிழர் சிங்களவரினும் பழைமையான இலங்கை நாட்டு மக்களே.

பழைய நூல்களில் கிழக்கும், மேற்கும் கடல் என எல்லை வகுக்கப்பட்டது. நன்னூல் (12ஆம் நூற்றாண்டுக்) காலத்திலிருந்துதான் 'குண கடல்' (Bay of Bengal) குமரி, குடகம் (Western Ghats) 'வேங்கடம்' என எல்லை கூறப்பட்டது. 12ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் மலையாளத்தில் மலையாள இலக்கியம் ஏற்பட்டுள்ளது.அதற்கு முந்திய ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட மலையாள நாட்டு இலக்கியம் தமிழ் இலக்கியமாயிருப்பதும் காணலாம். குலசேகராழ்வார் பதிகங்கள், சேரமான் பெருமாள் பாடல்கள் (7,8ஆம் நூற்றாண்டு) சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து முதலிய சங்க கால நூல்கள் (2-3 நூற்றாண்டு) ஆகியவை இத்தகைய மலைநாட்டுத் தமிழ் நூல்கள்.

சங்க காலத் தமிழ் வேளிருள் நன்னன் கன்னட நாட்டுத் தமிழ்க் குறுநில மன்னன். சங்க நூல்களில் கூறப்படும் எருமையூர் உண்மையில் மைசூரே (எருமையூர்: வடமொழி மஹிஷபுரி- மைசூர்). கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும் புன்னாடு கன்னட நாட்டிலும் பண்டைக் கன்னட நாட்டுப் பகுதியாகவே (புன்னாடு) கூறப்படுகிறது. வேங்கடத்துக்கப்பாலும் தமிழ் வேளிர் (சிற்றரசர்) இருந்தனர். பல்லவர் அல்லது திரையர் உண்மையில் இவர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல குறிப்புகள் உள்ளன. பல்லவர்க்கு இழிவு கற்பிக்கும் புராணக் கதைகளினாலேயே, இவற்றின் பக்கம் ஆராய்ச்சியாளர் நோக்கம் நாடாமல் இருந்து வருகிறது. இப்பல்லவர் ஆந்திரருடனும், கன்னட நாட்டுக் கங்கருடனும், சோழருடனும் இரண்டற்ற தொடர்புடையவர்கள். பிற்காலத்தில் கலிங்க நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் சோட (சோழ) மரபினர் ஆண்டு வந்தனர்.

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். தெலுங்கு, தெனுகு என்பதற்கும் (தேன்) இனிமை, மணம் என்றுதான் பொருள். கன்னடம் என்பதற்கு (கம்-வாசனை; கன்னல்-கரும்பு) இனிமை என்பதுவே பொருள் ஆகும்.

மிகப் பழைமைவாய்ந்த மலையாள கன்னட நூல்கள் கிட்டத்தட்ட தமிழாகவேயுள்ளன. மலையாள நூல்களில்