இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேறுபாட்டைக் குறிக்க எழுந்ததேயாகும். தொல்காப்பியர் எக்காரணங் கொண்டோ செந்தமிழை வேறுபடுத்தி அதையே தமிழ் எனக் கொண்டு எல்லை வகுத்து, அதை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழ்நாடு 'செந்தமிழ்' பேணிற்று; கொடுந்தமிழைக் கொடுமைக்கு ஆளாகக் கைவிட்டுத் தமிழகத்தைக் குறுக்கிற்று.
செந்தமிழும் கொடுந்தமிழும் ஒருதமிழ் ஆதல் வேண்டும் என்று அரசியல்துறை எழுச்சி பெற்றவர்களனைவரும் விரும்புகின்றனர். புலவர்கள் உடனிருந்து ஒத்துழைப்பார்களா? அவர்கள் தமிழ் இலக்கியப் பற்று, தமிழ்ப் பற்று, தமிழ் மக்கள் பற்று, தமிழ்நாட்டுப் பற்று பெருந் தமிழுலகப் பற்று ஆக விரிவுபடுமா?