பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

83

தென்மொழிக்குக் குழுவின் எல்லை கடந்து வடநாட்டில் வடமேற்கில் பலூச்சி, நடுப்பகுதியில் கோண்டு, வடகீழ்ப் பகுதியில் இராஜமகாலி ஆகிய மொழிகள் தென்மொழிக் குழுவுடன் பொதுவாகத் தொடர்புகளுடையன. மொழியறிஞர் கூற்றுப்படி தென்மொழிக் குழுவிலும் அண்டையிலுள்ள தெலுங்கு கன்னடத்தைவிட இம் மொழிகள் தமிழுடன் நெருங்கிய ஒற்றுமையுடையவை. தென்மொழித் தொடர்பின் பரப்பைவிடத் தமிழ்மொழித் தொடர்பின் பரப்புப் பெரிது என்பதற்கு இது ஒரு தெளிவான நற்சான்று ஆகும். பிற வடநாட்டுத் தாய் மொழிகளிலும் ஒவ்வொரு தனிமொழியும் குழுவும் பெருங்குழுவும் தத்தமக்குள் அணிமை காரணமாக நெருங்கிய ஒற்றுமையும் சேய்மை காரணமாக வேற்று மையும் உடையன. இது இயல்பே. ஆனால், அணிமையல்லாத தென்மொழிக் குழுவுடனும், அதிலும் அணிமை குறைந்த தமிழ் மொழியுடனும் ஒவ்வொரு தனி மொழியும் குழுவும் பெருங்குழுவும் தனித்தனித் ஒற்றுமைத் தொடர்புடையவை யாயிருக்கின்றன. இத்துடன் குப்தர் கால இலக்கிய மொழியாகிய உலக வழக்கற்ற வடமொழி யொருபுறமும் இப்பெருங் குழுவின் பிறமொழிகள் மற்றொரு புறமும் தனித்தனி தொடர்பு ஒற்றுமைகள் உடையவையாய் இருக்கின்றன. பண்டை ஆரியர் பாஞ்சாலத்தில் வழங்கிய வேத மொழியைவிட இப் பண்டைய ஆரிய இலக்கியமொழி தென்மொழிக் குழுவுக்கும் தமிழ்க்கும் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பது தமிழ்ச் செல்வாக்கின் பண்டைய இந்தியப் பரப்பை நன்கு விளக்குகிறது.

நில எல்லையை விட்டுக் கடலெல்லையில் நெருங்கினால் அணிமைக் கடல் கடந்த பகுதியாகிய இலங்கையின் வட பகுதி இன்றும் தமிழ்மொழி பேசப் படும் பகுதியாயுள்ளது. அத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழினும் பழைமையும் பெருமை யும் குறைந்ததா யில்லை. பிற கடல்கடந்த நாடுகளான பர்மா, மலாயா, இந்துசீனா, பிஜி, முதலிய பகுதிகளிலும் இன்று தொழிலும் வாணிகமும் காரணமாகத் தமிழரே மிகப் பெரும்பான்மை யினராய்ச் சென்று பரந்துள்ளனர். இப் பரப்பு பெருமைக்குரியதென்று கொள்ளப் படலாம். சிறுமைக்குரியதென்றும் கொள்ளப்படலாம்.பரப்பும் தொடர்பும் இன்றுள்ளன என்பதை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். மேற்கிலும் தென் ஆபிரிக்கா, மொரிசியசு,