பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அராபியரும்

அப்பாத்துரையம் - 1

கயானா, ஜமாய்க்கா ஆகிய இடங்களில் தமிழர் பரந்துள்ளனர். த்தொடர்பும் பரப்பும் இன்றேபோல் பண்டும் வளர்ந்து இருந்தது-பரப்பு இன்றைவிட முன்பு மிகுதி என்பதைக் கல்வெட்டு, வரலாறு, பழம் பொருளாராய்ச்சி ஆகிய மூன்றுமே காட்டுகின்றன. பாண்டிய சோழ மன்னர் சீனப் பேரரசருடனும், உரோமப் பேரரசருடனும், அரசியல், வாணிக உறவு கொண்டிருந்தனர். கிரேக்கரும் தமிழக வாணிகத்தில் கலந்துகொண்டிருந்தனர். உரோமர் காலத்தில் உலகின் தங்கத்தில் பெரும்பகுதி தமிழகத்தில் வாணிகம், தொழில் ஆதிக்கமும் வந்து குவிந்தது-இன்றும் பல உரோமப் பேரரசர் கால உரோம நாணயங்கள் தமிழகத்தில் பெருவாரியாகக் காணப்படுகின்றன. இன்னும் பழைமையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்-3000,4000 ஆண்டுகளுக்கு முன்-ஆரியர் பெயர் உலகில் கேட்கப்படாத காலத்தில்-தமிழகம் சால்டியா வுடனும்,பாலஸ்தீனத்துடனும்,டயர் ஸைடனுடம், எகிப்துடனும் தொடர்பு கொண்டிருந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே ஆரியர்க்கு முற்பட்ட இந்தியா உலக நாகரிகத்தில் தலைமையும் முதன்மையும் தாங்கியிருந்த தென்பதைச் சிந்துவெளி நாகரிகம் காட்டுகிறது.

எனவே, தமிழர் தனித்து வாழ்ந்தவர் அல்லர்; தம் சூழ்நிலையில் படிப்படி யாய்ப் பரந்த மொழி, நாகரிக, கலை, வாணிகத் தொடர்பு பண்டிருந்தே உலக முழுமையிலும் தமிழர்க்கு இருந்ததென அறிகிறோம். உலகில் மனித வகுப்பின் முதல் நாகரிகமாக மேனாட்டினரால் கருதப்படுவது நடு உலக நாகரிகம் அல்லது நடுநிலக் கடல் நாகரிகமே. தமிழ் நாகரிகம் அதனுடன் நெருங்கிய தொடர் புடையது என்பதை யாவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் இனத் தொடர்பும் நாட்டுத் தொடர்பும் மொழித் தொடர்பும் எந்த அளவுக்கு இடம் பெற்றன என்பது தெரிய வாராவிட்டாலும் நாகரிகத் தொடர்பு கட்டாயம் இருந்தது-கிட்டத்தட்ட ஓரினம் என்று கூறத்தகும் அளவுக்கு நாகரிகத் தொடர்பு இருந்தது என்பதும் யாவரும் ஒப்ப முடிந்த உண்மையேயாகும்.

இத்தொடர்பில் கொடுக்கலும் வாங்கலும் நிறைய இருந்திருக்க இடமுண்டு-கட்டாயம் இருந்திருத்தல் வேண்டும்.