86
—
அப்பாத்துரையம் 1
எழுத்து; உயிரில் குறில், அதற்கிசைந்த நெடில், இரண்டு ணையுயிர் (Diphthongs); மெய்யில் வலி, மெலி, இடை ஆகிய இப்பாகுபாடுகள் எழுத்திலும் சரி, இலக்கணத்திலும் சரி ன்றும் மற்ற நாடுகளில் இல்லை. தமிழிலும் தமிழ்த் தொடர்புடைய இந்திய மாநில மொழிகளிலும் மட்டுமே உண்டு.
முதல் முதல் எண் வகுத்தமொழி எது என இன்று அறுதியிடப்பட்டு விடவில்லை. ஆனால், எண் இலக்கங்கள் உடைய மொழிகள் இன்றும் அரபு, வடமொழி, தமிழ் ஆகியவை மட்டுமே. அரபுமொழி காலத்தால் பிந்தியது. அது வடமொழியிலிருந்தும் பினீஷியரிடமிருந்தும் இலக்கம் எடுத்திருக்கக்கூடும். ஆனால் 9 இலக்கமும் 0-ம் இந்தியாவுக்கே உரியது என அறிகிறோம். இந்தியாவுக்குத் தனிப்பட உரிய அப்பண்பும் தனி இந்திய மொழியாகிய தமிழ்க்கே உரியது என்று கூறத் தேவையில்லை. இது ஏலாவிடினும்கூட, தமிழ்க்குத் தனி இலக்கமுண்டு-அதில் 0 இல்லாவிடினும் பதின் கூற்றுத் தொகைக்குறிப்பு (Decimal notation) உண்டு என்பதும்; இன்றும் எம்மொழியிலும் இல்லாத கீழ்வாய் (fraction) இலக்கம் உண்டு என்பதும் அதன் முதன்மையையும் தனிமையையும் வற்புறுத்தும்.
இலக்கிய இலக்கணம் தமிழில் இந்திய மாநில மொழிகள் எதனையும் விடப் பழமையானது. வடமொழி இலக்கணத்தில் இன்றுமில்லாத பொருட்பால், தொடக்கத்திலில்லாத யாப்பு, அணி தமிழில் தொன்றுதொட்டு உண்டு. இவை மட்டுமல்ல, இன்றும் உலகில் எம்மொழியும் வகுக்காத இசையிலக்கிய
லக்கணம், நாடக இலக்கிய இலக்கணம் தமிழில் வகுக்கப்பட்டிருந்தது.மொழி சார்ந்த கலைகள் மூன்றே - இயல், இசை, நாடகம்-என்ற உண்மை-தமிழர் 3000 ஆண்டுகட்கு முன்னரே அறிந்த உண்மை-உலகிற்கு-உங்களுக்கு இன்னும் புதிதே என்று நீங்களே காணலாம்.
இலக்கியம் கற்பனை, இயற்கை ஆகிய இரு சார்புடையது. இவை பொருட் சார்பு, இதன் வடிவம் கலை வடிவம். ஆகவே இலக்கியத்தைக் கற்பனை இலக்கி யம் (Romantic literature), வாய்மை யிலக்கியம் (Realistic literature) என்று இரு கூறாகவும்; இயற்கையிலக்கியம், கலை இலக்கியம் (Classical literture) என்று இரு கூறாகவும் வகுக்கலாம். கற்பனை இலக்கியமே உலகில்