வளரும் தமிழ்
87
எந்நாட்டிலும் மிகுதி. இதுவும் பெரும்பாலும் செயற்கைக் கற்பனை இலக்கியமே. இதன் வாழ்வே செயற்கைக் கற்பனை, அதாவது மரபு நெறியுடையது. இச்செயற்கை மரபையே தமிழர் புலநெறி வழக்கு என்றனர்.தமிழர் புலநெறி வழக்கு நாளாவட்டத்தில் யற்கைநிலை திரிந்து வரவரச் செயற்கையாகக் கம்பர் காலம் முதல் வாழ்வுடன் இம்மியளவும் தொடற்பற்ற முகில் மண்டலக் கற்பனையாகிவிட்டது. (Ultra Romanticism) உலகம் முழுதும் அணிமைக் காலம்வரை பரந்தது இந்தச் செயற்கைக் கற்பனைகளே -பாரசீக இலக்கியத்தின் கவிதை, மங்கை, தேறல்-இலக்கியக் கற்பனை, ஆறு மலைகள்-பாற்கடல், நெய்க்கடல் ஆகிய ஏழு கடல்கள் -ஹோமரால் சிறு தீவான ஐதாக்கா பெருந்தடந்தீவாகக் காட்டப்படல்-ஷேக்ஸ்பியரின் நில இயல், வரலாற்று மயக்கங்கள் திணை மயக்கங்கள்-தாந்தே யின் மூவுலக நாடகம்-கெதயின் மபிஸ்டாபிலிஸ்-டெனிஸனின் மாய உலகம் இவை
யாவற்றையும் கடந்து சங்க இலக்கியத்துக்கு வந்து பாருங்கள்; பின் இதுபோன்ற இலக்கியப் பண்பு எங்கெங்கு உள்ளன என்று காணுங்கள். தற்கால இரஷ்ய, டேனிய, இலக்கியத்தில்-பண்டை கிரேக்க இலக்கியத்தில்-காளிதாசர் கால வடமொழி இலக்கியத்தில்-புத்த சமயகால வடவரிலக்கியத்தில்-பெருங் கதையில்-மட்டுமே இதே பண்பைக் காணலாம். பலபடி குறைந்த அளவிலேனும், இன்று இந்திய இலக்கியத்தில் இதே பண்பு புகுந்து வருவது கண்கூடு. இப் பண்பு யாது?
அரசர் அரசி வாழ்விலிருந்து மக்கள் வாழ்வு. கற்பனையிலிருந்து இயற்கை.
வானுலகிலிருந்து மண்ணுக்கு.
காணாப் பொருளின் உவமை உருவகத்திலிருந்து. கண்டபொருளின் உவமை உருவகம்.
சமய நெறியிலிருந்து சமய சமரசம்.
இவை தவிர கற்கண்டெனத் திட்பம் வாய்ந்த கிரேக்க லக்கியத்தின் கலைப் பண்பை அதனிலும் பேரளவில் சங்க இலக்கியத்தில் காணலாம்.