88
அப்பாத்துரையம் - 1
உலக நாடக இலக்கிய இலக்கண வரலாறு பின்னோக்கிச் சிலப்பதிகார நாடகத்தில் சென்று முடிவது காணலாம். உலக நாகரிகத்தில், நாடக வரலாற்றில் விளங்காத பல புதிர்களைச் சிலப்பதிகாரம் விளக்கும்.
தமிழிலக்கியத்தின்
பிற சிறுதிறச் சிறப்புகள்
மொழிச்சார்பில் தனித்தமிழ் பேணப்படல், கலைச்சொல் விரிவு; பாடல் சார்பில் தொடர்பாக்கள், எதுகை மோனையற்ற பாக்களின் செல்வாக்கு மிகுதி; ஒழுக்க இலக்கியம், காதல் வீர லக்கிய முதன்மை; உலா அந்தாதி முதலிய செயற்கை நாடகக் கலைச் சின்னங்கள் ஆகியவற்றைக் கூறலாம். பிற்கால இலக்கியத்திலும் சமயப் பாடல், பக்திப் பாடல் தமிழ்க்கே உலக மொழிகளில் முதன்மை தருவதாகும். திருவாசகம், அப்பர் தேவாரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றுக்கு வடமொழியில்கூட ஒப்பிடத்தக்க பாடல்கள் மிகமிகச் சில. பிறமொழிகளே போட்டிக்கு முன் வரவேமாட்டா.
இத்தனை பரப்பு, முதன்மை, உரம் உடைய மொழி தளர் வானேன்-தளர்ந்து நலிவானேன்?
இதனை ஆராயுமுன் இதன் இன்றைய குறைபாடுகளையும் சுருக்கி முதலில் கூறுவேன்.
தமிழில் உரைநடை பெரும்பாலும் இல்லை. (இன்று ஏற்பட்டு வருகிறது.)
நாடகம் கிட்டத்தட்ட இல்லை. (இன்னும் இதில் கவனம் செலுத்தப் பெறவில்லை.)
அறிவியல் வளர்ச்சி தொடங்கவே இல்லை. கலைச் சொல் லாக்கம் கூட உண்மையான உணர்ச்சியுடன் தொடங்கப் பெறவில்லை.
கதை இல்லை. புனைகதையும் கட்டுரையும் இதழகத் துறையும் மற்றும் இன்றைய வளர்ச்சிகளாகக் காணலாம்.
வரலாறு இல்லை.
இலக்கிய வரலாறு இல்லை.
இலக்கிய ஆராய்ச்சி இல்லை.