வளரும் தமிழ்
கால ஆராய்ச்சி மட்டும் தான் உண்டு.
மொழியாராய்ச்சி தொடங்கி வருகிறது.
89
இலக்கியமொழி வேறு, பேச்சுமொழி வேறு என்ற நிலை
வளர்வது.
தமிழில் ஏன் இக்குறைபாடுகள் வந்தன? இவை இயற்கைக் குறைபாடுகளா?
சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின் நாடகம் கைவிடப் பட்டது. இதில் ஓர் ‘அதிசயம்’ வடமொழியில் நாடகம் வானுற ஓங்கி வளர்ந்துள்ளது.இருமொழிப் புலவர்கள் இந்தியாவெங்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வட மொழியைப் பார்த்துப் பின்பற்றிப் பின்பற்றி இலக்கியம் வகுத்தும் ஒரு நாடகம் கூடத் தமிழிலோ தாய்மொழிகளிலோ எழுத முடியவில்லை- எழுத முயன்ற தாகக்கூடக் காணோம்!
வடமொழியின் சிறப்பில் அணியிலக்கணம் தலை சிறந்தது- தமிழனாகிய தண்டியே அதன் ஒப்பற்ற தலைவன்-முதல்வன். ஆனால், தமிழில் தண்டிக்குப் பின் அது வளர்ச்சியடைவில்லை. தமிழரே அதனை வளர்த்தனர்- ஆனால் வடமொழியில்!
உரைநடை தமிழில் பழைமையுடையது. தமிழ் உரையாசிரியர் இந்தியா முழுவதிலும் உள்ள கவிதை இலக்கிய ஆசிரியரைவிடப் பழைமையானவர். சிலப்பதிகாரமோ பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுள். ஆனால், உரைநடை அணிமைவரை ஏனோ இல்லை. ஏட்டில் எழுதும் மரபு இதற்குக் காரணமா? இதே ஏட்டில் இதே தமிழ் நாட்டில் சங்கரர் வடமொழிக்கு உரைநடை வகுத்தனரே. அதற்கும் முற்பட உபநிடதங்கள் உரைநடையிலிருந்தனவே?
வரலாறு கண்ட இலக்கியம்-வரலாற்றுத் தொடர்பும் வாழ்க்கைத் தொடர்பும் உடைய இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. பதிற்றுப் பத்து ஒரு சேர நாட்டு வரலாறு. இடைக் காலத்திலும் பாட்டில் கல்வெட்டுகள் உண்டு. சோழன் மெய்க்கீர்த்திகள் உண்டு. ஆனால், வரலாறு வளர்க்கப்பட வில்லை. வரலாற்று மரபுகள் இருந்திருத்தல் வேண்டும். புராணங்களாக அவை திரிக்கப்பட்டன. கவிஞர் புகழுரை