பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 1

வரலாறு சமயப் புராண வரலாறாயிற்று. இதற்குச் சிபிச் சோழன், மனுச் சோழன் வரலாறுகள் சான்றாகும்.

மேலும் முத்தமிழ் ஒரு தமிழாயிற்று.

பண்டைத் தமிழக எல்லை தேய்ந்து தேய்ந்து குறுகி வந்துள்ளது.

தமிழ்க்கும் தமிழின அயல் மொழிகளுக்கும் உள்ள அடிப்படை மொழித் தொடர்பு மறக்கப்பட்டும் மறக்கடிக்கப் பட்டும் வந்துள்ளது. அவற்றின் இலக்கிய மரபில் வடமொழி மரபு வளர்ந்து தென்மொழி அல்லது தாய்மொழி மரபு அதாவது தமிழ்த் தொடர்பு குறைந்து வந்துள்ளது-வருகிறது. ஆனால், இதே அளவுக்கு நாட்டுத் தொடர்பு, மக்கள் தொடர்பு, இயற்கைத் தொடர்புகளும் குறைந்துதான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றால் தமிழ்ப் பண்பும், தமிழினப் பண்புத் தொடர்பு களும், தமிழர் நாகரிகமும் ஒருங்கே தேய்ந்து வந்துள்ளது காண்கிறோம். எந்நாட்டாராலும் அணிமை வரை ஆளப்படாத தமிழர்-எம் மொழிக்கும் எந்தக் காலத்துக்கும் வளைந்து கொடாத தமிழ்-எவ்விலக்கியத்துக்கும் எக்காலத்திலும் முற்பட்டும் முந்தியும் இருந்த தமிழிலக்கியம் உள்ளுயிர் மாளாவிடினும் ஒளியற்று, பேணுதலற்றுத் தளர்ந்துவந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இது ஏன்?

இலக்கியத் தளர்ச்சிக்குரிய காரணங்கள் வரலாற்று

மாணவர் விளக்கத்தக்கவையே.

1. சமய நூல்களுக்கு முதன்மை ஏற்பட்டது.

2. சமய வேறுபாடு இலக்கியத்தில் கட்சி வேறுபாடு புகுத்தியது.

3.

4.

பிறமொழி உயர்வும் அதன் மொழி பெயர்ப்பும் செல்வாக்கும் பெருகிற்று.

அரசர்கள் தமிழைவிடப் பிற மொழி உயர்வில் நம்பிக்கை யுடையவராய், பிற மொழிப்பற்று மிக்கவராயிருந்தனர்.