பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. தென்னாட்டின் கலை வாழ்வு

தமிழகம் பல துறைகளிலும் மிக விரைவாக முன்னேறி வருகிறது. தமிழரே அறியாத அளவு முன்னேறுகிறது என்று கூடக் கூறலாம். பல காலமாகப் பல காரணங்களால் அமுக்கப் பட்டுக் கிடந்த தமிழகத்தின் உள்ளாற்றல் படிப்படியாக வெளிப்பட்டு வளர்ச்சிக்குத் தூண்டுதல் தருகின்றது.வளர்ச்சியின் கருநிலை யறிந்து தக்க உரமிட்டு வளர்த்தால், தமிழகம் உலகில் மதிப்புக்குரிய ஓரிடம் பெறும் என்பதில் ஐயமில்லை.அவ்வகையில் தமிழர் செய்தல் வேண்டும் ஆக்க முயற்சிகள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது தமிழகத்தின் வாழ்வு நலியத் தொடங்கு முன் இருந்த-நலிவுற்றும் வெளித் தோன்றாமல் மறைந்தும் இருக்கும் பண்புகளை அறிந்து அவற்றை உயிர்ப்பித்தல் வேண்டும்.

இரண்டாவதாக, தமிழகம் எவ்வளவு விரைவாக முன்னேறினாலும் தமிழகத்தை அடுத்துள்ள பிற தென்னாட்டுப் பகுதிகளும் பிற நாடுகளும் இன்னும் விரைவாகப் பல துறைகளில் முன்னேறுகின்றன என்பதை மறுக்க முடியாது. தமிழறிஞர் அவற்றை ஊன்றிக் கவனித்து ஆவன கொண்டு தமிழகத்தை வளப் படுத்துதல் வேண்டும். இவ்வகையில் சிறப்பாகத் தென்னாட்டில் பிறபகுதி களையும் மேனாடுகளையும் கூறுதல் வேண்டும். தென்னாட்டில் பிறபகுதிகளில் தமிழகத்தில் நலிவுற்ற சில துறைகள் நலிந்தொழியாதும் வளர்ந்தும் வருகின்றன. மேனாடுகளில் அறிவியல், பொறியியல் துறைகளில் எட்டிப் பிடிக்கமுடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவதாகத் தமிழர் தம் தனித் தன்மை (Individuality) யையும் தற்புதுமையையும் (Originality) வளர்த்தல் வேண்டும். வெளிநாடுகள் வழி காட்டி யாகவும் தூண்டுதலாகவும் இருக்க