பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. தமிழியக்கமும், தமிழர் சமய வாழ்வும்

‘உலகின் மிகப் பழைய நாகரிகம் தமிழக நாகரிகமே; தொன்மை மிக்க மொழி தமிழே; சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் உலகுக்கு வழிகாட்டியாய் நின்றதும், நெடுநாள் உலகில் தலைமை வகித்து நின்றதும் தமிழகமே' என்று தமிழர் தொன்று தொட்டு நம்பி வந்திருக்கின்றனர்.

பிற நாட்டாராய்ச்சியாளர் இதனைத் தாய்மொழிப் பற்றுக் காரணமான புகழ்ச்சி என்று புறக்கணித்தல் இயல்பே. புறக்கணித்தும் வந்துள்ளனர். இன்றும் ஆராய்ச்சியாளர் இப் புகழுரையை அப்படியே ஏற்கின்றனர் என்று கூற முடியாது. ஆனால், ஆராய்ச்சிகளால் ஏற்படும் உண்மை வெளிப்பாட்டின் போக்குத் தமிழரின் இப் பெருமையை ஆதரிக்கும் முறையிலேயே சென்று கொண் டிருக்கிறது.

தாயன்பு காரணமாகத் தமிழர் கூறும் இப் புகழுரைகளை வருங்காலத்தில் தாய்ப் பண்பு பற்றிய அறிவு காரணமாகத் தமிழர் கொள்ளக் கூடும்.

ஆராய்ச்சியின் இப் போக்குக் கண்டு தமிழர் எழுச்சியும் மகிழ்ச்சியும் கொண்டால் அது இயல்பேயன்றி வேறன்று. அது மட்டுமன்று, மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், துளுவர் முதலியவர்கள் நாடுகள் தமிழகத்தை அடுத்துள்ளவை. அவர்கள் மொழிகள் தமிழுடன் பிறந்த மொழிகள் என்று கூறப்படுகின்றன. அவர்களும் இப் பெருமையில் பங்கு கொள்ளத்தானே செய்வர்!

இந்தியா ஒரு 'நாடு' என்று பலரும் கொள்கின்றனர். தமிழ்நாடு இந்திய மாநிலத்தின் ஓர் உறுப்புத்தானே! உறுப்பின் பெருமை உடலின் பெருமை ஆகாதா? ஆகவே இந்தியரும் இதில் பெருமை கொண்டால் வியப்பில்லை. மலையாள நாட்டில் பிறந்த சங்கராச்சாரியையும், தமிழ் நாட்டில் பிறந்த இராமானுஜாச்