பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 1

தமிழின் பல நூல்கள் வடமொழி பிறப்பதற்கே முந்திய நூல்களா யிருக்கக் கூடும்!

தமிழ் நாட்டார் தம் தற்பெருமையால் அண்டை அயலிலுள்ள தெலுங்கர், மலையாளிகள் ஆகியவரைப் பகைத்துத் தம் பெருமையைக் குறைத் திருக்கலாமா?

ஒருவேளை இருக்கலாம் என்று நாம் நினைக்க இடமுண்டு. தமிழருக்குக்கூடத் தம் மொழியைத் தாழ்த்திப் பேசினால் அவ்வப்போது சினம் ஏற்படுகிறதே! அவர்களுக்கு ஏற்படாதா?

18ஆம் நூற்றாண்டுவரை, திருவாங்கூர், கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களின் அரசர் அரசியல் மொழி தமிழ். மலையாள நாட்டில் கம்ப ராமாயணம் அணிமைவரை- இன்றும் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. சிலப் பதிகாரம் மலையாளிகளால் தம் நாட்டுப் பழைய இலக்கியமாகப் போற்றப் படுகிறது.பழைய மலையாள நூல்கள் தமிழ் எழுத்தில், அதாவது வட மொழிச் சிறப்பெழுத்துகள் விலக்கி, தமிழ்ச் சொல் பண்பு பிழையாமல் எழுதப்பட்டுள்ளன.

தெலுங்கில் நாச்சியார் திருப்பாவை எழுத்தெழுத்தாய் ஓதி உரை விளக்கப் படுகிறது. காசி கேதாரம் வரை வைணவக் கோவில்களில் பாடப்படுகிறது. பல நாயன்மார்கள் கதைகள் சேக்கிழாருக்கு முன்பே தெலுங்கில் எழுதப்பட்டன. ஆண்டாள் சரிதை விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயராலே தெலுங்கில் காவிய மாக எழுதப்பட்டது. பழைய மலையாள, சிங்கள,

ராமாயண பாரதங்கள் வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படவில்லை. தமிழிலிருந்தே மொழி பெயர்க் கப்பட்டன. சிங்களத்தில் 5ஆம் நூற்றாண்டிலேயே (காளிதாசன் காலத்திலேயே) சிலப்பதிகாரம் மொழி பெயர்க்கப்பட்டது!

சங்கராச்சாரியர் (8ஆம் நூற்றாண்டில்) தம் வட மொழி நாவாரச் சம்பந்தர், கண்ணப்பர், சாக்கியர் ஆகிய மூன்று நாயன்மார்களையும் வணங்கியிருக்கிறார். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சிவஞான போதமும் மட்டுமேனும் தமிழிலிருந்து வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழர் பெருமையை ஏற்று எல்லா நாட்டினருமே கடன் பெறத் தயங்கிய தில்லை. ஆனால், இக் கடன்கள் மறக்கப்பட்டன, இன்றும் மறைக்கப்படுகின்றன ஏன்?