வளரும் தமிழ்
99
வடமொழி தெய்வமொழி அல்லது தற்கால முறையில் சொல்லப் போனால் சமயமொழி. அதனாலே தமிழ் மொழியின் சிறப்புப் பேணாது வடமொழிக்கு எல்லா நாட்டவரும் வணங்கினர் என்று கூறப்படக் கூடும்.
டமொழியில் வேதம், பிராமணம், உபநிடதம், பாரத ராமாயணம், கீதை, சுமிருதிகள், வேத அங்கங்கள் ஆகியவை உண்டு. இவை இந்துகளின் சமய நூல்கள். வை வடமொழியில்தானே உள்ளன?
ஆம்; ஆனால், வடமொழி வேதத்தில் கண்ட சமயம் இந்து மதமா? இல்லை. இந்துகள் பெரும்பாலாக வணங்கும் சிவன், திருமால் பெயர்கள்கூட அங்கு மருந்துக்கும் கிடையாது. பிற்காலத்தில சைவரும் வைணவரும், அதில் சொல்லப்பட்ட உருத்திரரையும் சூரியரையும் சிவ விஷ்ணுக்களாகக் கொண்டு மனமமைந்தனர். இந்துகளின் பிறப்பிறப்புக் கொள்கை, ஆ பேணல் முதலிய பழக்க வழக்கங்கள் எதுவும் அதிலில்லை. இவையெல்லாம் வடமொழிச் சமய நூல்களில் படிப்படியாகவே காணப்படுகின்றன. இன்றைய இந்து மதத் தத்துவங்களை ஒருங்கே காண வேண்டினால் ஓரளவு இராமாயணத்துக்கும், மகா பாரதத்துக்கும் வருதல்வேண்டும். இவையும் அவ்வப்போது எழுதிச் சேர்க்கப்பட்ட பகுதிகளே.
ஆனால், தற்கால இந்து மதத்தில் இடைக் காலத்தில் எழுந்த கறைகளான சாதி வேறுபாடு, தீண்டாமை, முதலிய நீங்கலாக எல்லா அடிப்படைப் பண்புகளையுமே தமிழிலக்கியத் தொடக்கக்கால நூல்களிலிருந்து காணலாம். இங்கும் வளர்ச்சி ல்லாமலில்லை. ஆனால், இங்குள்ள வளர்ச்சி உருவளர்ச்சி, உறுப்பு வளர்ச்சியல்ல. தொடக்கத்தில் (பரிபாடல்) சிறுபிள்ளையாகக் காணப்படும் கருத்துகள் நாலாயிரத்திலும், தேவாரத்திலும், மெய்யறிவு நூல்கள் பதினான்கிலும் பருவ மங்கையாகக் காட்சியளிக்கின்றன. வடமொழியிலோ முதலில் ஒருகால், பின் ஒரு கை, பின் வயிறு, தோள் என்றே வளர்ச்சி காணப்படும். காரணம் வட மொழியில் இச்சமய வளர்ச்சி கடன் வாங்கிய வளர்ச்சி, தமிழில் வாழ்வில் மலர்ந்த வளர்ச்சி என்பதேயாகும்.