பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(100)

அப்பாத்துரையம் - 1

இந்திய சமய வாழ்வின் அடிப்படைக் கருத்துகள் யாவும் திராவிடச் சார்பானதே சார்பானதே என்பதை மோகெஞ்சதாரோ ஆராய்ச்சியாளர் எடுத்துரைக் கின்றனர். அங்கே இந்திய சமயத்தின் கருநிலை காணப்படுகிறது.

வடமொழி தேவமொழி என்ற கருத்து, கம்பர் காலத்துக்குமுன் தமிழிலும் இல்லை. வடமொழியிலுமில்லை.

கம்பர்

காலத்தில் மொழி இலக்கியத்திலும் தமிழிலக்கியம் பரந்ததா யிருந்திருத்தல் வேண்டும். இடைச் சங்க, தலைச்சங்க நூல்கள் அவர் காலத்தில் அழியவில்லை என்று தமிழுரையாசிரியர் கூற்றுகளால் அறியலாம்.

இந்து மதம் சிவநெறியும், திருமால் நெறியும் சேர்ந்த முழுநெறி என்று மக்கள் எண்ணுகிறார்கள். சிவ நெறி நூல் முற்றிலும் தமிழிலேயும் மீந்தவை சில கன்னடத்திலும்தா னிருக்கின்றன. திருமால் நெறி நூல்களோ தமிழில் மட்டுமே உண்டு. வடஇந்திய வைணவ இயக்கம் ஆழ்வார்களைப் பின்பற்றிய இராமானுசர் சீடரின் சீடர் வழிமரபால் வந்ததே.

இங்ஙனம் சமய முறையிலும் தமிழே முதன்மை வகிக்க வேண்டியிருக்க, அதற்கு இரண்டாமிடமும் மூன்றாமிடமும் பத்தாமிடமும் மறுக்கப்படுவானேன்? தமிழர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும்?

தமிழில் அன்புகொண்ட தமிழர்கள் மனத்தில் மேற்கூறிய கொதிப்புகள் 2000 ஆண்டுகளாக எழுந்திருத்தல் வேண்டும். பல தடவை தமிழர் ஏமாந்தனர், தவறினர். ஆனால், எல்லாரும் தவறவில்லை. நல்ல காலமாக இன்று தமிழர் குறைகூறும் அளவு தமிழ்ப் பண்பில் நழுவிய கவிஞர்கள்கூடப் பல இடங்களிலும், தலைமறைந்து எழுந்த வடமொழியலையை எதிர்த்து ஆங்காங்கே தமிழ்ப்பண்பு பேணியிருக்கின்றனர். சேக்கிழார், கம்பர், ஆழ்வார்கள் பாடலுக்கு உரையெழுதிய பெரியவாச்சான் பிள்ளை ஆகியோர் சமயங் காரணமாக ஆயிரந் தடவை தமிழுக்கு மாறுசெய்தும் ஆங்காங்குக் குத்தும் கத்தியைத் தாக்கும் புழுப்போலப் பகைப்பண்பை எதிர்த்துத் தாக்கி யிருக்கின்றனர். அவர்கள் இன்று பிறந்திருந்தால் தம் நூலைத் தாமே பாழ்நூல் என்று கூறியிருப்பர்!