வளரும் தமிழ்
[103
தமிழர் சமயம் எது என்று கண்டு அதனை ஆக்கும் வேலை வேண்டுவதில்லை. தமிழர் சமயத்தில் ஆவன கொண்டு அல்லன நீக்கி அவரவர் முயன்றால் போதும்!
ஆயின் ஆவன கொள்ள யாரும் தடைசெய்யவில்லை. 'உனக்கு முருகனா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? காளியா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? இவ்வாக்க வேலைக்கு விளம்பரம் போதும்; போர் வேண்டுவதில்லை.
ஆயின்; அல்லன விலக்குதல் அப்படியல்ல. ஒருவனுக்கு ஆவது, அடுத்த வனுக்கு ஆனாலும், ஆகாவிட்டாலும் கெடுதலில்லை. ஆயின், அல்லன வற்றை நீக்குதல் வேண்டுமானால் அனைவரும் நீக்குதல் வேண்டும்.
வீட்டுக்கு ஒரு மாடி, இரு மாடி, ஏழு மாடி வைப்பதால் அயலானுக்குக் கேடில்லை. ஆனால், இடிந்து விழும்படி கட்டினால்?
எது சமயம் என்பதில், தமிழரிடையே, தமிழியக்கத் தாரிடையேகூட ஒற்றுமையில்லை. சிவம் தமிழ் என்பார் ஒருவர், அன்றென்பார் மற்றொருவர். ஆனால், இது தாவில்லை (கேடில்லை)! எது தமிழர் சமயம் அன்று என்பதில் தமிழறிஞர் எல்லாருமே ஒற்றுமைப்பட்டுள்ளனர்.கீழ்க்காணும் செய்திகளில் முதல் நான்கு தமிழர் (கிறிஸ்வர் முகம்மதியர் உள்பட) யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்கவை. மற்ற இரண்டு உணர்ச்சி மேலீடுள்ள சிலர் (நல்லெண்ணத் துடனேயே) மறுக்கக் கூடியவையாகலாம்.
1. தமிழரிடையே பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது. உயர்வு தாழ்வுகள் இயற்கையாய் ஏற்படுவதுண்டு. இயற்கையாகவும் முயற்சியாலும் அவை போகும். ஆனால், இன்று தமிழரிடையே ஏற்பட்டுள்ள உயர்வு, இவர்கள் இன்றைய சிவன் கோவில், பெருமாள் கோவில் தாழ்வு முற்றி லும் இயற்கையானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது இயற்கையாய் அழிவதையும் முயற்சியால் அழிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
ய
2.தமிழரிடையே இன்று ஏற்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு தமிழரில் ஒரு சாராரே ஏற்படுத்திய உயர்வு தாழ்வல்ல. ஏனெனில், தமிழ்ப் பண்பு குறைந்து அடிமைத் தன்மை மிகுந்தோறும் உயர்வு