அப்பாத்துரையம் - 1
104 ||- தரப்படுகிறது. தமிழ்ப் பண்பு மிகுந்தோறும் அடிமை உணர்ச்சி குறையும் தோறும் தாழ்வு ஏற்படுகிறது.
தமிழ் நாட்டுப் பழம் பாணர் குடியே வீரரைப் பாடாமல் கடவுளைப் பாடி அவர் பெயராகிய திரையில் மறைவிலிருந்து வாழும் நச்சரவை அண்டித் தேவரடியாளாய் தேவடியாள் குடியாயிற்று. பக்தருக்கு மறுபதமான தேவரடியார், தாசர் என்பவற்றின் பெண்பாலே தேவடியாள் தாசி என்றாகியிருப்பதும்; தமிழ் நாட்டிலும் சரி, இந்திய மாநிலத்தின் வேறெந்த நாட்டிலும் சரி, பக்த வகுப்பாரன்றி மற்றவர்கள் 'தாசர்' என்று பெயர் கூட வைத்ததில்லை என்பதும் காண்க.
அரசர்க்கு அமைச்சராயிருந்த வள்ளுவர் குடியே-தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பிறந்த திருக்குடியே-இன்றைய பறையர் குடி; அவர்கள் இன்று தீண்டப்படாதவர்.
இன்னும் இதுபோல் பிற ஆய்ந்துணரலாம்.
3.தொழிலால் ஏற்பட்ட நால் வகுப்பான அந்தணர், அரசர். வணிகர், வேளாளர் என்பவருள் நால்வரும் பிறப்பால் ஒரே வகுப்பினரே. வேளாளர் என்ற சொல்லின் வேராகிய ‘வேள்' கடவுளையும், போர்ப்படையையும், உழுபடையையும், குறித்தலால், வேள்வி வழிபாட்டையும், வேளாளர் அந்தணரையும் வேளிர் அரசரையும், வேளாளர் வணிகரையும், உழவரையும் உணர்த்தும் சொல்லாகின்றது.
வேளாளரே சமயத்தீக்கைபெற்று அந்தணராவர். போர் வெற்றியால் அரச மரபினர் ஆவர். தொழிலால் வணிகரும் உழவரும் ஆவர். எனவேதான் வேளாளர் உயர்வாகக் கூறப்பட்டனர். இது பிறப்பாலன்று. தொழிலால் (இன்று வேளாள ரிடையே செல்வ நிலையிலுள்ளார் நான்காம் வகுப்பினராகவும் உழுது வாழ்பவர் ஐந்தாம் வகுப்பினராகவும் ஆகியிருத்தல் கவனிக்கத்தக்கது.)
4.துறவோர், அந்தணர் என்பவர்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். (பிறப்பொட்டிய எவ்வகுப்பினரும் அல்லர்; அதிலும் கொலை வேள்வி செய்தலை ஆதரித்துச் சாதி வேற்றுமையை அறமாகவும் சமய அடிப்படைக் கொள்கையாகவும் கொண்ட வகுப்பினர் அல்லவே அல்லர்!)