பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(106)

அப்பாத்துரையம் - 1

6.கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், சமயங் கடந்தவர் (எனவே எச் சமயத்துக்கும் அவர் உரியவர் அல்லர்) அவர் குணம், குறி, ஊர், பேர் அற்றவர் (எனவே ஆண் பெண் பால்வேறுபாடு, சாதி வேறுபாடு ஆகியவை அவர் பெயரால் ஏற்படமுடியாது. அவர்க்குத் தனியாக ஒரு தாய்நாடும் தாய்மொழியும் கிடையாது.)

குறிப்பு 1 :- இக் கடவுட் கொள்கை உயர்ந்ததேயாயினும்,

இக் க் கடவுளின் அருள் நிலையைத் தாமும் கொண்டுதான் போலும் தமிழர் தம் பண்பிழந்து பிறர் பண்பு பேணி யழிவுற்றது என்று எண்ணாதிருக்க முடியவில்லை. ‘அருளும் அருளுடையார் கண்ணதே' என்பதைத் தமிழர் ஓராதிருந்தனர், இருக்கின்றனர்.

குறிப்பு 2:- தமிழர்க்குச் சமயம் இல்லை என்று கூறுவோர் சொற்கள் பழந்தமிழர் கடவுட் கொள்கைக்கு அவ்வளவு முரணாயில்லை என்பது காண்க. அரசியலில் ‘ஆளாத அரசியலே நல்ல அரசியல்' என்பர். 'சமயத்திலும் சமயமாகாத சமயமே உயர் சமயம்' என்னலாகும்.

சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த சமயப் பற்று உண்டு. சமயப் பற்றிலாழ்தல் இல்லை. துறவியாகிய இளங்கோ எல்லாச் சமயமும் பாடி நடுநிலை நின்றமை இக்காலத்துறவியரால் முடியுமா? துறவியல்லாதவரால்தான் முடியுமா?

7.கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் வாழ்வும் இல்லை. அவர் அருள்வலியால் (தற்கால மொழியில் இயற்கை யாற்றலால்) உயிர்களும் உலகங்களும் நடைபெறுவதன்றி அவர்களை அல்லது அவற்றைத் தோற்றுவிப்பது மில்லை, அழிப்பதும் இல்லை (சமய மொழியில் கூறினால் அவர் சாட்சி மாத்திரமாய் நின்று இயக்குகிறார்.) உயிர்களுக்கு அவர் செய்வதெல்லாம் துன்பத்தினின்று விடுதலைபெற உதவுவதுதான்.

க்கருத்துகளுக்கு மாறுபட்ட சமயம் தமிழர் சமய மாகாது. மாறுபட்டகருத்துகளும் தமிழர் சமயக் கருத்துகளாகா.

ன்றைய தமிழர் சமயத்தில் மேற்கண்ட கருத்துகள் ல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், அச்சமய நூல்களிலிருந்தே இவை எடுக்கப்பட்டன.