welcome to page
இம் மூன்றாம் நெறிக்குப் பெயர் வழங்குவதில்லை. ஆனால், பெயர் உண்டு. அதுவே சுமார்த்தம் என்பது.
சாதி வேறுபாட்டைப் பேணுதல், வடமொழிக்கு எல்லா வகையிலும் உயர்வு காத்தல் இவை இவர்கள் தொழில்.
சுமார்த்தர் திருநீறிட்டும் இடாமலும் சிவன் கோவிலை ஆளாமல் ஆள்வர். அவர் தம்மைச் சிவப் பிராமணர் என்றுகூடக் கூறிக்கொள்வதில்லை. சைவர்கள் அத்தகைய திருமண் பாவைகள் என்று அவர்கள் எண்ணியிருத்தல் வேண்டும்.
ஆனால், வைணவர் கோவிலில் செல்லும் சுமார்த்தர் தம்மைச் சுமார்த்தர் என்று கூறிக்கொள்வதில்லை. வைணவர் என்பர்.நாமம் கட்டாயம் டுக் கொள்வர். ஆனால் அவர் ‘கலை’யால் அவரையறியலாம். வடமொழி பேணும் அவர்க்கு வடகலை' என்ற பெயர் பொருத்தம் தானே!
வைணவத்தில் கோவில் குருக்களாகிய தென்கலையான் விவரம் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் வடகலையை எதிர்ப்பான். சைவம் பணிவல்லவா? சைவக் குருக்கள் சிவமாகிய பிராமணரில் ‘ஐக்கியமாய்' ஒன்றாகி வேறாகி நிற்கிறார்போலும்!
சைவரும் வைணவரும் சுமார்த்த நெறியையும் வட கலையையும், ஒழித்தாலன்றி அவர்கள் நெறி பழைய தமிழ்நெறி யாகாது.
இவற்றை ஒழித்தால் கோவில் தமிழ் வேதங்களே பாடப்படும்.தமிழ் மந்திரங்கள் ஓதப்பட வழி ஏற்படும். வடமொழி வேதம் ஒழிக்கப்பட வழியுண்டு. சாதி, தீண்டாமையை ஒழிக்க முற்படலாம்.
சுமார்த்தர்களிடம் கோயிலை விட்டுவிட்டு, நல்ல உணர்ச்சி மிக்க தமிழர் நாஸ்திகரானால், 'கடவுளே, இந்த நாஸ்திகர் பக்கம் நின்று ஆஸ்திகப் பூண்டை அழி என்றுதான்' தமிழர் வேண்டிக்கொள்ளல் தகுதி.