நூலாசிரியர் விவரம்
xiii
அறிஞர் தொடர்பு:
-தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
-1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் சன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
-1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் 'சான்றோர் பட்டம்', 'தமிழன்பர்' பட்டம்.
-1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ‘கலைமாமணி’.
-983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய 'திரு.வி.க.' விருது, தங்கப் பதக்கம்.
-மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய 'பேரவைச் செம்மல்' விருது.
-961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
-1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
-இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்' நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
-பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், பேரா.முனைவர்.கு.வெ.பாலசுப்பிரமணியம், சாகித்திய
அகாதெமி, 2007.