(112)
||
அப்பாத்துரையம் - 1
தமிழர்களிடையே ஆராய்ச்சித்துறை குன்றி 'நூல்' என்ற சொல்லில் மாறாட்டமும் குழப்பமும் ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். ஆயினும், இலக்கண நூலோர் அச் சொல்லைப் பெரும்பாலும் பிற ழாமல் வழங்குகின்றனர். உரையாசிரியர்களும் இவ்வேறுபாடு குறித்துள்ளனர்.
ச்
இப் பொருள் வேறுபாடு முற்றிலும் மறக்கப்பட்ட காலம் எது என்று கூறமுடியாதாயினும் வடமொழியாளர்களால் தமிழ்ப் பண்பாடு அறியப்படு முன்னரே இச் சொற்குழப்ப மேற்பட்ட தென்னலாம். திருவள்ளுவமாலையில் நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ என்று குறித்திருத்தல் காண்க.
பாட்டு
இப்போது பாட்டு, பா, செய்யுள் எல்லாம் ஒரு பொருளில் வழங்குகின்றன. இவற்றின் எதிர்ச்சொல் ஆக வழங்குவது
உரைநடை.
உரையென்பது பாட்டுக்கு உரை என்ற பொருளில் பிற்காலத்து வழங்கியதும் உண்டு. பண்டைத் தமிழ் நூல்கள் உரைநடையை உரைச் செய்யுள் என்றன. இதிலிருந்தே செய்யுள் என்பது உரைக்கு எதிரிடையல்ல என்று காணலாம். உரை என்பது பேச்சு. அந் நடையில் இலக்கண இலக்கிய வரம்பமையச் செய்யப்பட்டது உரைச் செய்யுள். யாப்பமைதியும் அமைந்தால் அது யாப்பு அல்லது பாவகை ஆகும். ஆகவே செய்யுள் என்பது இன்று நாம் இலக்கியம்' என்று கூறும் பொருளில் வழங்கியதாயிருத்தல் வேண்டும் என்று கூறலாம். பாவகையில் பாவேறு,பாவினம் வேறு என்றும் வகுக்கப்பட்டன.
து
அறிவு சான்ற கருத்துகள் நூலாக நூற்பாவில் எழுதப்பட்டது போல; அறிவும் உணர்ச்சியும் அழகும் சான்ற கருத்துகள் பாக்களாக எழுதப்பட்டன. சிலகால் பாவினங்களாகவும் எழுதப்பட்டன. இவற்றின் ஓசையின் இசைநயம் மிக்கதான முறையே பாடல், அல்லது பாட்டு எனப்பட்டது. ஆகவே பாவேறு, பாட்டு வேறு ஆகும். சிலப்பதிகாரம் பாக்களாலானது. தேவாரம் பாட்டுகளாலானது. இப்பாட்டுகள் பாவாகவும் பாவினமாகவும் இருக்குமாயினும், பாவினங்கள் பெரும்பாலும் சைப்பாட்டுகளிலேயே வழங்கின. தேவாரம் இசைப்பாடல்