பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[113

தொகுதி என்பதை மறந்து இசையுணர்வு கெட்ட பிற்காலத் தமிழகம் அதைக் காவியத்துக்கும் பயன்படுத்திற்று. இலக்கியம் என்ற பொருளுடைய செய்யுள் எனும் சொல் பொருள் மாறுபட்டதனாலேயே செய்யுளும் நூலும் சேர்ந்தது; இயல் என்னும் எண்ணம் மறந்துபோயிற்று. பழம் முத்தமிழ்ப் பகுப்பின் பரப்பை ஆங்கிலக் குறியீடுகளுடன் 47 ஆம் பக்கம் உள்ள விளக்கப் படிவத்தில் காண்க.

விருத்தங்கள் வட மொழியிலிருந்து வந்தவை என்பது பலர் கருத்து. இது தவறான கருத்து. தமிழில் அது பாவினமாய் சையில் மட்டும் வழங்கியது. கலிப்பா உறுப்புகளில் வரும் வகைகள் விருத்தங்களே. பலவகை அடிகளிலும் எழுதப்பட்ட அவை நாளடைவில் நான்கடி என்று வழங்கின. தமிழரே இதனை அளவடி (Standard number of feet) என்றனர். அடி, கால் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பாகவே வடமொழி அடி (பாதம்) அமைந்திருப்பதும் காணலாம். வடமொழியிலேயே விருத்தமுறை பிற்பட்டது. அவற்றில் எதுகை மோனை அமைந்தது தேவாரக் காலத்துக்கும் பிற்பட்டுதான். வேத இதிகாசக் கால வடமொழி யில் மூன்றடி, இரண்டடி ரண்டடியே மிகுதி.

பட்டினம்

தமிழர் வழக்கில் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள துறைமுக நகரம் எனப் பொருள்படும். தமிழர் நிலத்தை ஐந்திணையாக்கி ஒவ்வொரு திணையிலும் சிற்றூருக்கும் பேரூருக்கும் தனித்தனிப் பெயர்கள் வழங்கினர். இவ்வேறுபாடு உலகில் வேறு எம் மொழியிலும் கிடையாது. இவ்வேறுபாடு அழிவுற்ற பின்னரே வடமொழி மொழி இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், இதன் சுவட்டை வடமொழியில் காணமுடியவில்லை. வடமொழிப் பண்பாடு பிந்திய தென்பதற்கு இவ்வெதிர் மறைச்சான்று மட்டுமன்று; நேர்முகச் சான்றும் உண்டு. பட்டினம் என்ற சொல் கடற்கரைப் பேரூர் என்ற பொருள் கெட்டதுடன் எழுத்து உருவமும் குறைவுற்றுப் பட்டணம் என இன்றும் வழங்குகிறது. இது பிற்பட்ட வழக்கு என்று கூறத் தேவையில்லை. வடமொழியில் இப்பிற்பட்ட வழக்கும் பிற்பட்ட வடிவுமே காணப்படுகின்றன. அத்தோடு அது பிறமொழி (தமிழ்)ச் சொல்லாதலால் பட்டணம்,