114) ||
அப்பாத்துரையம் - 1
பட்டனம், பத்தணம், பத்தனம் எனப் பலவாறாகவும் எழுதப் பட்டது. இவ்வழக்கும் மிக அருகலானதும் பிற்காலத்ததும் ஆகும்.
தமிழர் குறித்த பொருளில் பட்டினம் என்ற சொல் இன்றைய தமிழ் நாட் டெல்லையில் மட்டுமன்றிப் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டின் முழு எல்லையையும் காட்டி இந்தியா எங்கும் அக்குறிப்பு மாறாமலே இடப் பெயர்களில் வழங்கப் படுகிறது. நெய்தல் நிலச் சிற்றூராகிய பாக்கம், மருதநிலத்துப் பெயராகிய ஊர் ஆகியவற்றைப்போலவே பட்டினம் என்னும் பெயரும் இந்தியாவெங்கும் துறைமுகப்பட்டினங்களின் பெயர் ஈற்றிலேயே இருப்பது காணலாம். காயல் பட்டினம், குலசேகரன்பட்டினம், நாகப்பட்டினம், சேரப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், சென்னைப்பட்டினம், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகியவை காண்க. கங்கைக் கரையிலுள்ள பாட்னா ஆற்றுத் துறைமுகப்பட்டினம் ஒன்றைக் குறித்த பெயரேயாகும்.
பொன்
தமிழில் இன்று உலோகங்களைக் குறிக்கும் பொதுச் சொல் இல்லை என்று தோற்றும். ஆனால் ஐம்பொன் என்ற வழக்கும் வெண்பொன் (வெள்ளி) என்ற வழக்கும் உண்மையில் இப்பொருளுடைய சொல் 'பொன்' என்பதே என்று காட்டும். இப்பொதுச் சொல் தங்கத்தின் பெயராய்க் குறிக்கப்பட்ட காலம் எதுவோ அறிகிலோம். ஆனால், இப் பெயரிலிருந்தே பெரும்பாலான உலோகப் பெயர்கள் வந்துள்ளன என்று காணலாம். வங்கம், ஈயம், தங்கம், பித்தளை என்ற நான்கு உலோகங்களுக்கும் தமிழர் தனிப் பெயரிட்டனர். இவையே அவர்களுக்கு முதலில் அறியவந்த உலோகங்கள் என்றுகூட எண்ணலாம். இவற்றைப் பொதுவாகக் குறிக்க அவர்கள் பொன் (பொலிவுடையது) என்ற என்ற சொல்லை வழங்கினர். மற்ற உலோகங்களை அவர்கள் நிறம்பற்றியும் பண்பு பற்றியும் காரணப் பெயராகக் குறித்தனர். செம்பொன் (Copper) சிவப்பு நிறமுடைய பொன், செம்பொன் என்பதே செம்பு எனக் குறுகிற்று. வெண்பொன்(Silver) இதுபோல் வெள்ளி யாயிற்று. இரும்பொன் (இருமை=கறுப்பு) கருமை நிறமுடைய பொன். இது இரும்பு எனக்