வளரும் தமிழ்
[117
வடமொழிப் பண்டிதர்களும் அவர்களைப் பின்பற்றித் தமிழ்ப் பண்டிதர் பலரும் இடைக்காலத்தில் தமிழிலக்கணம், இலக்கியம் ஆகிய எல்லாம் வடமொழி வரவுகள்தாம் என்று நிலைநாட்ட முயன்றனர். “அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்றறையவே நாணுவர் அறிவுடையோரே” என்று தமிழை இழிவு படுத்தித் தம்மைப்போன்ற தமிழறிஞரையும் அறிவிலாதவர்கள் என்று கூறிய இலக்கணக் கொத்து ஆசிரியர் இவ்வகுப்பையே சேர்ந்தவர் ஆவர். மேல் நாட்டாரது பகலொளி ஆவர்.மேல் கதிர் எரிக்கும் இந்நாள்களில் இப் ‘பழம்பாடை’க் கருத்துகள் பட்டப் பகல் நிலவுபோல் பொலிவிழந்து போயின. ஆயினும் சூரப்பன்மன் 'திருவுரு'கள் போல் அவை பல்வேறு உருவில் இன்னும் வந்து நம்மை மருட்டுவதுண்டு.
தற்போது தமிழினமும் ஆரிய இனமும் வேறு வேறான தனிப்பேரினங்கள் என்ற காள்கை எங்கும் ஒப்புக் காள்ளப்பட்டுவிட்டது. எனவே, தமிழினின்று ஆரியம் வந்ததென்றோ ஆரியத்தினின்று தமிழ் வந்ததென்றோ எவரும் கூற இடமில்லை. எனவே இவ்விரு மொழிகளின் உறவெல்லாம் ஒத்துவாழும் காலத்தில் ஏற்பட்ட நட்புறவுகளாயிருக்கக் கூடுமே யல்லாமல், ஒன்றுக்கொன்று தாயகமான உறவு எதுவும் இருக்க
முடியாது.
இன்றைய தமிழிலக்கியத்தின் தோற்றக்காலமுதலே அதாவது நமக்குக் கிட்டியுள்ள பழந்தமிழிலக்கியக் காலமுதலே ஒரு சில வடசொற்களேனும் தமிழிலக்கியத்தில் காணப்படுவ தோடு அவை வரவரப் பெருகியும் வந்துள்ளன. திருநாலா யிரத்துக்கு உரை எழுதப்பட்ட காலத்திலும் சைவ சித்தாந்த நூல் களுக்கு விளக்க உரைகள் எழுந்த சைவமடங்கள் காலத்திலும் வண்டிக் கணக்கில் வடசொற்களை மொத்த இறக்குமதி செய்யும் முயற்சிகள் செய்யப் பட்டன. ஆனால், யார் பெற்ற பேறோ அம்முயற்சிகள் பயனற்றுப் போயின. தமிழிலே மட்டுமன்றி, தமிழினத்தின் பாற்பட்ட அயல் மொழிகளிலும் ஒவ்வொரு காலத்தில் இத்தகைய “மணிப் பிரவாள நடை தோற்றுவிக்க முயற்சிகள் நடந்து இங்கேபோல் அங்கும் அவை தோல்வியுற்றன என்பது கவனிக்கத்தக்கது.
""