118
அப்பாத்துரையம் 1
—
இராமாயணக் கால முதல் இலக்கியம் என்ற பெயரால் மொழி பெயர்ப்புகள் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டன.
இதுகாறும் கூறியவை தமிழ்மீதும் தமிழர்மீதும் ஆரியத் தாக்குதலால் ஏற்பட்ட மாறுதல்கள். வை பலவிடத்தும் மிகைப்படுத்தப்பட்டுப் பாமரத் தமிழ் மக்கள் காதில் நன்றாக உறைக்கும்படி எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனால், இதனை ஒட்டித் தமிழர் தாக்குதலால் ஆரியம் மாறுபட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதுமில்லை; எழுமானால் மறைக்கவும்படுகிறது.
வடமொழி தமிழ்மொழி உறவில் வடமொழியினால்தான் தமிழ்மொழியில் மாறுதல்கள் ஏற்பட்டன. தமிழ்மொழியினால் வடமொழியில் மாறுதல் ஏற்பட வில்லை என்று வடமொழியின் பண்டிதர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் முதற்கொண்டு எண்ணி வருகின்றனர். ஆனால், மொழி, இலக்கியம், சமயம், நாகரிகம், கலை ஆகிய எந்தத் துறையிலும் உண்மை இதற்கு நேர்மாறான தென்பதை வரலாறும், ஆராய்ச்சியும் வரவர விளக்கி வருகின்றன. மொழியைப் பற்றிய மட்டில் வடமொழியினால் தமிழில் ஏற்பட்ட மாறுதல்கள் சில சொற்களின் வரவு மட்டுமே. நாட்டு ஆர்வமும் மொழியார்வமும் மேம்பட்டு வரும் காலங்களில்
வை யெல்லாம் எளிதில் விலக்கிவிடத்தக்க சில்லறை மாறுதல்களேயாகும். ஆனால், தமிழ்மொழியின் தாக்கினாலும் தமிழின மொழிகளின் தாக்கினாலும் வடமொழியும் வட இன் மொழிகளும் அடைந்துள்ள மாறுதல்கள் அடிப்படையான வையும் விலக்கப்படாதவையும் ஆகும். ஏனெனில், அம் மாறுதல்கள் வெறும் சொல் ஆட்சி மட்டிலும் அன்று. ஒலி, இயல்பு, சொல்முறை, சொல்முறை, கருத்துத் தெரிவிக்கும் முறை ஆகியவற்றையும் பற்றியதாகும்.
மொழிகளாகிய
வடமொழிக்கு இனமான வெளிநாட்டு பாரசீகம், கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மானிய, கெல்டியக் குழுக்கள் ஆகியவற்றில் ள,ண,ட ஆகிய ஒலிகள் ல்லை. வடமொழியில் இவை வர வர மிகுதியாகி இன்றைய வட இன மொழிகளில் பெரிதும் மலிந்து கிடக்கின்றன. இம்மிகுதி தமிழினத்தை யடுத்துப் பேசப்படும் மராத்தியிலும், பீகாரியிலும், வங்காளியிலுமே கூடுதலா யிருப்பது கூர்ந்து நோக்கத் தக்கது.