பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[119

ஆகிய

வடமொழியில் பெரும்பாலும் ள், ண, ட இவ்வொலிகள் ல், ன, த ஆகிய எழுத்துகள் திரிந்து ஏற்பட்டவையே. ஆயினும், இவற்றினிடையேயும் பல சொற்கள் அத்தகைய மாறுதல்களுக்கு இடமில்லாத முதற் சொற்களாகும். இம்முதற் சொற்களில் பல தமிழ் அல்லது தமிழினச் சொற்களே ஆயிருக்கக் கூடும். ட என்ற எழுத்து வகையில் பல சொற்களில் இவ்வுண்மையைத் தெளிவாகக் காணலாம். இரண்டு எடுத்துக்காட்டுகள் இவ்வகையில் தருவோம். கடம் என்பது குடம் என்ற தமிழ்ச் சொல்லின் இன்னொரு வடிவம். இதைவிடத் தெளிவாகத் தமிழ்ச்சொல் பட்டணம் என்பதாகும். இச்சொல் தமிழில் பட்டினம் என்றும் பட்டணம் என்றும் வழங்கும். இதன் உண்மையான பொருள் கடற் கரையிலுள்ள துறைமுக நகரம் என்பதாகும். தமிழ் நாட்டில் பட்டணம் என்று முடியும் பயர்களாகிய சென்னைப் பட்டணம், காயல் பட்டணம், நாகப்பட்டணம் ஆகியவையும் தெலுங்கு நாட்டிலுள்ள விசாகப்பட்டணம்கூடக் கடற்கரையிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. உலக வழக்கத்தில் இந்த நுட்பத்தை மக்கள் கவனிப்பதில்லை. வடமொழியாளரும் இந்நுட்பம் அறியாமல் அதனை நகரம் என்ற பொருளிலேயே வழங்குகின்றனர். இச்சொல் பட்டணம், பட்டநம், பத்தநம் என்று பலவாறாக எழுதப் பெறுவதும், வடமொழி காஞ்சி அரசர்களால் வளர்க்கப் பட்ட காலத்தில் வாழ்ந்த தண்டிக்குப் பிற்காலத்திலேயே இது வடமொழியில் ஆளப் பெறுவதும் அது புது வரவு என்பதை வலியுறுத்தும். மேலும் பட்டி (ஊர்) என்ப துடன் இச்சொல் இணைவுடையது.

ண என்ற எழுத்து வருமிடங்களில் பெரும்பாலும் நகரம் மாறியே ணகர மாகும். அப்படி மாறாத இடங்களில் அச் சொற்களும், தமிழ் அல்லது தமிழினச் சொற்களேயா யிருக்கக்கூடும்.

இவை தவிர வேத காலத்துக்குப்பின் முன் வழக்கு இல்லாத பல சொற்கள் வடமொழியில் வந்து குவிந்தன. இவற்றுள் பலவற்றை வடமொழி உரை யாசிரியர்களே தேசி அல்லது நாட்டுச் சொற்கள் என்று ஒத்துக் கொண்டனர். நாம் அறிந்தவரை குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை