120 ||
—
அப்பாத்துரையம் 1
வடமொழி இந்நாட்டில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, அதன் சொற்களெல்லாம் நூல் வழக்கிலேயே பாதுகாக்கப்பட்டிருத்தல் வேண்டும். வேதவழக்கு முழுவதையும் யாஸ்கர் என்பவர் நிருக்தம் என்ற நூலிற் தொகுத்துக் கூறி யிருக்கிறார். அவர்க்குப் பிற்பட்ட பாணினியும் தம் காலத்துச் சொற்களை ஆராய்ந்து அவற்றின் சொல் மூலங்கள் அல்லது தாதுக்களைத் தொகுத்தார். இவ்விரண்டு தொகுப்புகளுக் கிடையிலும் புதிதாக வந்த சொற்களிலும் பாணினிக்குப் பின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி காலம்வரை வந்த சொற் களிலும் பெரும்பாலானவை தமிழினச் சொற்களே. காஞ்சி"க் காலத்துக்குப் பின் சைவ சித்தாந்தக் கருத்துகள் வடமொழியில் புகுந்ததை யொட்டிப் பல தமிழ்ச் சொற்களும் நேரிடையாகவோ கருத்து மொழி பெயர்ப்பாகவோ வட மொழியில் சென்று ஏறின. ஈசன் என்பதற்குப் பதியும் ஆன்மா என்பதற்கு பசுவும் மற்றும் மாயை, பாசம், மலம் முதலிய சொற்களும் வடமொழியில்
கையாளப் பட்டன.
பல
சொற்கள்
இனமொழியாகிய
கலவாமல்
வ
வடமொழியில் இந்துஸ் தானி முதலியவற்றில் வழங்கினதுண்டு. எடுத்துக்காட்டாக, திரும்பு அல்லது வளை என்ற பொருளில் இந்துஸ்தானியில் வழங்கும் மோட் (மோடு) என்ற பகுதி இவ்வகையில் தமிழ் முடங்கு, முடக்கு என்பவற்றுடன் இயையு என்று காணலாம். வேறு பல சொற்கள் நேரிடையாக வட மொழிக்குச் செல்லாமல் பாளி, பாகதம் முதலிய நாட்டு மொழிகளின் வாயிலாக வடமொழி சென்றன. இவற்றுள் சிலவற்றை வரும் பகுதிகளில் ஆராய எடுத்துக் கொள்வோம்.
சொற்களின் போக்கிலும், இலக்கண அமைப்பிலும், வாசக ஒழுங்கிலும், வடமொழி தமிழாலடைந்த மாற்றம் கொஞ்ச நஞ்சமன்று. தமிழில் பெயர்ச்சொல் ஒருமையிலும், பன்மையிலும் ரே படியான உருபு ஏற்கும். வடமொழியில் தெளிவான உருபு
ல்லாமல் பெயர்ச் சொல் சிதைந்து மாறும். ஆனால், நாளடைவில் வட மொழியிலும் ஒருமை, பன்மைகளில் ஒரே படியான உருபுச் சொற்கள் தோன்றின. நான்காம் வேற்றுமை உருபினிடமாக கிருதே (ஆக) என்ற சொல்லும் ஐந்தாம் வேற்றுமை உருபினிடமாக தஸ் (இருந்து) என்ற உருபுச்