வளரும் தமிழ்
க
121
சொல்லும் இத்தகையவை. தமிழினத்தின் கூட்டுறவால் வடமொழியில் முன் உருபுகள் (Preposition) அருகி இறுதியில் ஒழிந்தன; இணை இ டைப் பெயர்கள் (Relative Pronoun) அருகி வினையாலணையும் பெயர் புதிதாக உண்டு பண்ணப்பட்டது. உம்மை இடைச் சொல்லால் (ச) இணைத்துத் தொடுத்த வினை முற்றுகளின் இடமாக வினை எச்சங்கள் பெயர் எச்சங்கள் பெருகின. சொல் ஒழுங்கிலும் பண்டை வட இன மொழியாகிய தொடுப்பு முறை (Analytic Sequence) நீங்கித் தமிழின முறையாகிய அடுக்குமுறை (Synthetic arrangement) ஏற்பட்டது.
ஆகவே, வடமொழி தமிழ்மொழி ஆகியவற்றினிடையில் ஒரு சொல்லோ பண்போ பொதுவாகக் காணப்பட்டால் உடன், தானே இலக்கணக் கொத்து ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகரைப் போல அது வட மொழியைத்தான் சார்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது அறிவுமாகாது; மனித நேர்மையான மொழிப் பற்றுமாகாது என்று காணலாம். ஆராய்ச்சியாளர் அவ்வியற்கையான மொழி உணர்ச்சிக்குக்கூட ஆளாகாமல் உண்மையை அறியும் அவாவை மட்டுமே கடைப்பிடித்தல் வேண்டும்.
அத்தகைய ஆராய்ச்சிக்குத் தூண்டுதல் தரும் வகையில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய பொதுச் சொற்கள், இடைக்காலத்தில் வடமொழியில் சென்று வழங்கியதனால் வட சொற்களென்று கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் ஆகியவற்றுள் சிலவற்றை இங்கே ஆராய எடுத்துக்கொள்வோம்.
உலகில் எல்லா மொழிகளுக்கும் ஒரு முதல் தாய் மொழி இருந்திருத்தல் வேண்டும் என்று பல நாட்டுமக்களும் அறிஞரும் கருதி வந்திருக்கின்றனர். இந்நம்பிக்கையால் பொதுப்பட மொழியாராய்ச்சிக்குப் பல குந்தகங்கள் நேர்ந்திருக்கின்றன. மேனாட்டார் விவிலிய நூலின் பேபல் கோபுர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல்லூழிகளுக்கு முன் யூதரின் தாய்மொழியாகிய ஏபிரெயமே உலகத் தாய்மொழியாயிருந்தது என்று நம்பி வந்தனர். ஆனால், ஆராய்ச்சி இந்நம்பிக்கைக்குச் சற்றும் இடம் தரவில்லை. வடநாட்டார் உலகின் தாய்மொழி வடமொழி என நம்பினர். ஓரளவுக்கு வடநாட்டு மொழியாராய்ச்சியும் மேலைநாட்டு மொழியாராய்ச்சியும்