122) ||
அப்பாத்துரையம் - 1
இதற்கு உதவின. ஏனெனில், வடநாட்டு மொழிகள் யாவும் உலகின் வேறுபல மொழிகளும் உண்மையில் ஒரே ஆரிய இனமொழிகளாதலால் பெரிதும் ஒப்புமை உடையவையா யிருந்தன. ஆனால், அவ்வினத்துக்கும் வடமொழி தாய் மொழியல்ல; பிற ஆரிய இனமொழிகளிலும் முந்தி இலக்கிய வடிவம் பெற்ற முதல் மொழி வடமொழியே என்று நாளடைவில் தெளிவாயிற்று.
று
தென்னாட்டில் தமிழ்மொழி மேற்கூறிய இரண்டு மொழிகளைப் போலவே உலகத் தாய்மொழி என்று பழந்தமிழரால் கொள்ளப்பட்டிருந்தது. வடமொழிப் பற்றுதலால் பண்டிதர்கள் சில நாள் இதனை ஏளனம் செய்து புறக்கணித்தனர். ஆனால், ஆராய்ச்சி இதனை முற்றிலும் ஏற்கும் நிலைமையி லில்லையாயினும் இதனை ஒருவாறு விளக்கும் பல சான்றுகள் தருகின்றது. அறிஞர் கால்டுவெல் தமிழினத்தின் இன்றைய மொழிகளாகிய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய பண்பட்ட பெருமொழிகளிடையேயும் பண்படாத பல மொழிகளிடையேயும் பிறமொழிகள் அல்லது மொழி உட்குழுக்கள் ஒன்றை ஒன்று தழுவுவதைவிடத் தமிழ் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ்வொரு வகையில் தழுவி நிற்கும் நடுநாயக இணைப்பு மொழியாயிருக்கிறது என்று விளக்கினார். அதுமட்டுமன்று உலகின் பிற இனங்களாகிய ஆரிய இனம், செமித்திய இனம், மங்கோலிய இனம், ஆஸ்திரிக இனம், ஆப்பிரிக்க - அமெரிக்க இனங்கள் ஆகியவற்றுடனும், அவற்றின் தனி உறுப்புகளுடனும் தமிழ் பற்பல ஒற்றுமைகள் உடையது என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர். இத்தனை மொழிகள், இத்தனை இனங்களுடன் தமிழ் பின்னிக்கிடக்க அவை, தம்முள் இவ்வளவு பின்னல்களுக்கும் இடையே தமிழுடன் அடிப்படைத் தொடர்பு கொண்டு டப்பதைக் காண, தமிழ் உலகத் தாய்மொழியாய் இராவிடினும் இன்று அத்தாய் மொழிக்கு மிகவும் அருகிலிருக்கும் தலைமொழியும் எல்லா மொழி களின் இணைப்பு மொழியும் ஆகும் என்று அறிஞர் கால்டுவெல் முதலியோர் கூறினர்.
இற்றைக்குப் பல்லாயிரம், அல்லது பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஏற்பட்ட இவ்வுறவுகளில் சிலவே, சிலசமயம் தமிழையும் வடமொழியையும், சில சமயம் தமிழையும்