வளரும் தமிழ்
[123
ஆரியப் பொது மொழிகளையும், சில சமயம் தமிழையும் வடமொழி நீங்கலான பிற ஆரிய ன மொழிகளையும் இணைக்கின்றன. தமிழுக்கும் ஆரிய இன முழுமைக்கும் பொதுமையான பண்புக்கு உகரச் சுட்டை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். இது தமிழில் அண்மையும் சேய்மையும் அல்லாத எல்லா உறவுகளையும்-இடைப்பட்ட தொலை, பின்புறம், மேல், கீழ், உள், மறைந்த நுண்பொருள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். வடமொழியிலும் ஆரிய இனத்திலும் உச்சம், உபரி, உத்-. முதலிய சொற்களிலும், சொற் பகுதிகளிலும் இது மேல் என்ற பொருளில் வழங்குகிறது.
தமிழ் பழைய, புது என்ற சொற்கள் வடமொழியிற் காணவில்லை. ஆனால், பண்டைய ஆரிய இன மொழியாகிய கிரேக்க மொழியில் உள்ளன. (ஆங்கிலத்தில் Palaeology பழைமையாராய்ச்சி என்ற சொல் இதிலிருந்து வந்ததாகும்.) இன்னும் அரிசி, நாவாய் முதலிய சொற்கள் (கிரேக்க மொழியின் ஒரிசா, நாவியா) இத்தகைய பழங்கால உறவுகள் அல்ல என்றும் அலெக் ஸாண்டர் படையெடுப்பின் பின் ஏற்பட்ட கிரேக்கர்-தமிழர் வாணிப உறவாலென் றும் கொள்ளப்படுகிறது. எப்படியும் பழைய, புது போன்ற சொற்கள் இவ்வாறு ஏற்பட்டிருக்க முடியாது. ஆகவே, ஆரியரான கிரேக்கர் கிரேக்க நிலம் வருமுன் அண்மை மேனாடுகளில் பரவியிருந்த ஈஜிய வகுப்பினர் தமிழருடன் கொண்ட தொடர்பின் பயனாகவே இவ்வுறவுகள் ஏற்பட்டிருக்கலாம்.
அரசர், இடையர் (அல்லது பசு மேய்ப்பவர்) என்று இருமைப்பட்ட பொருளில் ‘கோ' என்ற சொல்லும் ‘ஆர்’ (நிறைவு) என்ற சொல் மூலத்தினுடன் தொடர்புடைய ஆரியன் (ஆன்றோன்) என்ற சொல்லும் வடமொழிக்கும் தமிழ்க்கும் பொதுவான இத்தகைய முதல் உறவுச் சொற்களாம். சுற்று, சூழ் என்பவற்றுடன் உறவுடைய சுன்னம், சூரியன் என்பவையும் இவற்றின்பாற்படும்.
எனவே தமிழ்க்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்களின் ஒரு பகுதி மனித நாகரிகத் தொடக்கக் காலத்தில் எல்லா மொழிகளுக்கும் தாயகமாக ஒரு தமிழின மொழி இருந்த காலத்தைச் சார்ந்ததென்பதும், அவ்வொரு மொழியின் நேர்வழி