பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(124)

||

அப்பாத்துரையம் - 1

மொழியாய் இன்று இயங்குவது தமிழென்பதும், அத்தகைய தமிழுடன் இப்பண்டைய உறவு கொண்ட மொழி வடமொழி மட்டுமல்ல, பிற ஆரிய இன மொழிகளும், பிற இன மொழிகளும் கூடவே என்பதும் அறியக் கிடக்கின்றன.

இப் பழங்கால உறவைவிட்டு வரலாற்றுக் காலத்தில் தென் மொழியி லிருந்து வடமொழியாளர் எடுத்துக் கொண்ட சொற்களில் தமிழ்ச் சொல் என்று இன்று காட்டத்தகும் சொற்கள் சிலவற்றை முறைப்படி இனி ஆராய்வோம்.

தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்கள் எல்லாம் வட சொற்கள் என்று கொள்ளப்படுவது தவறு என்று முன்னைய பகுதிகளில் காட்டிய செய்திகள் தெளிவு படுத்தும், பிறநாட்டு வட இனமொழிகளில் காணாமல் வேதகால வடமொழியில் மட்டும் காணப்படும் சொற்கள், வேதகால வடமொழியில் காணாமல் பிற்கால வடமொழியில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான சொற்கள், வடமொழியில் காணாமல் பாளி, பாகதம் முதலிய பண்டைப் பேச்சு மொழிகளிலும் இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி முதலிய தற்காலப் பேச்சு மொழிகளிலும் காணப்படும் கணக்கற்ற சொற்களில் பெரும்பகுதி ஆகியவை.தமிழிலிருந்து நேராகவோ தமிழின மொழிகளிலிருந்தோ எடுக்கப்பட்டு வடமொழியியற்கைப்படி மாறின சொற்களே யாகும். இங்ஙனம் மாறிய மாற்றம் இருவகைப்படும். ஒன்று சொல்லின் பொருளை மொழி பெயர்த்தல், மறைக்காடு என்பதற்கு வேதாரண்யம் என்றும், திருமலை என்பதற்கு ஸ்ரீபர்வதம் என்றும் மொழி பெயர்த்துக் கொள்வது இவ்வகை. இன்னொருவகை தமிழ் ஒலிகளை அப்படியே வைத்தும் திரித்தும் வழங்கல்,பொதிகை மலை வட மொழியில் மலயம் என்று பெயர் பெற்றிருப்பது திரிபு மிகுதி பெறாத வழக்கு. காவிரி என்ற தமிழக ஆற்றின் பெயர் காவேரி என்று மாறுபட்டதும் வைகை வேகவதி என்று மாறுபட்டதும் பலவகையில் ஒலியை மாற்றித் திரித்துக் கொண்ட திரிபு வழக்குகள். இத்தகைய சொற்கள் வடமொழியில் சென்றன என்பதை நிலை நாட்டச் சில சான்றுகள் சொற்களைத் தருவோம்.

அகில் உலகில்

ன்றுகூட வேறெங்கும் விளையாது