பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிகை மலை யடிவாரம் ஒன்றிலேயே விளையும் ஒரு வகைச் சந்தனமாம். இது குழம்பாய் அரைப்பதற்கு மட்டுமன்றிச் சாம்பிராணி போல் புகைப்பதற்கும் வழங்கப்படுவது. பெண்கள் அகிற்புகையை ஊட்டித் தலைமயிர்க்கு மணமூட்டுவர். தமிழிலக்கியத் திலும் வடமொழி இலக்கியத்திலும் இது பெரிதும் குறிக்கப்பட்டுள்ளது. இது வளர்வது பொதிை யிலென்று வடமொழி நூல்களே குறிக்கின்றன. வடமொழியில் தன் பெயர் அகரு என்பதாகும். தென்னாட்டு மலையின் பொருள் தென் மொழியிலிருந்து முதலில் தோன்றியிருத்தல் வேண்டும். வடமொழியில் சிறிது மாறுதலுடன் கையாளப்பட்டது.

யானை இந்தியாவில் மேற்குத் தொடர் மலைப்புறத்திலும் பர்மாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காணப்படும் விலங்கு. இதற்குச் சரியான இடுகுறிப் பெயர் வடமொழியில் கிடையாது. கரி, ஹஸ்தி முதலிய பெயர்களெல்லாம் கையுடைய விலங்கு என்று பொருள்தரும் இடுகுறிக் காரணப் பெயர்களேயாகும். இன்றும் யானை பழக்கும் பாகர் பெரும்பாலும் தமிழ்நாட்டை யடுத்த மலையாள நாட்டினரே. ஆனால், யானைநூல் இன்றும் சங்க காலத்திலும்கூட வடமொழி யிலேயே இருந்ததாம். இந்நூலும் பிற நூல்களும் தமிழினின்றுதான் வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டுமெனக் கொள்ளுதல் இயல்புதானே. அங்ஙனம் சொல்லும்போது அவற்றின் சொற்கள் பல மேற்கூறியபடி நேராகவும் மொழி பெயர்த்தும் திரித்தும் வடமொழி புகுந்தன என்பதும், பழைய நூல்கள் தமிழில் அழிக்கப்பட்ட பின் அவை வட மொழிக்கு உரிமையாக்கப் பட்டன என்றும் கூறுதல் வேண்டும்.

சைவ சமயம் இன்னும் முற்காலத்தும் தமிழ்நாடு மட்டிலுமன்றி இந்தியா எங்கும் பரந்திருந்த தென்பது யாவரும் அறிந்ததொன்றே. ஆயினும் ஆராய்ச்சி முறையில் சைவ சிந்தாந்தம் நிலைபெற்று வளர்ச்சி யடைந்தது தென்னாட்டில் தான். அதன் நூல்கள் வட மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன என்று அண்மைவரைப் பலர் கூறிவந்தனர்.