பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126) ||

அப்பாத்துரையம் 1

தமிழறிஞர்களால் தமிழில் செய்யப்பட்டதை வட மொழிப் பற்றாளர் சிலர் வடமொழியில் பின் மொழிபெயர்த்துக் கொண்டனர் என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் இவ் வடமொழி தென்மொழி நூல்களுக்கு நெடுநாள் முன்னரே தமிழ் நாட்டில் சைவ சித்தாந்த உண்மைகள் நன்கு பரவியிருந்தன என்பதை 10ஆம் நூற்றாண்டிலும் 8ஆம் நூற்றாண்டிலுமுள்ள சோழர் பல்லவர் கல்வெட்டுகள் காட்டுகின்றன. 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகக் கொள்ளப்படும் திருமூலர் திருமந்திரமும் இதனை வலியுறுத்தும். வடமொழியிற் சென்ற இச் சைவ சித்தாந்தத்துடனும் அதன் கிளைகளான சங்கரர் மாயாவாதத்துடனும், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியவர் நெறிகளுடனும் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் பயிலலாயின. அவற்றை மேலே விவரித்துக் கூறுவோம்.

பெரிய புராணக் கதைகள், திருவிளையாடற் புராணக் கதைகள், தமிழர் கதைகள் ஆகிய யாவும் வட மொழியிலிருந்து

மொழி பெயர்க்கப்பட்டன என்று வடமொழியின்

மொழிபெயர்ப்புகளை மூலமாகக் கொண்டு கூறுவது எவ்வளவு பேதைமை?

பொதுப்படஇவ்விலக்கிய நூல்களெல்லாம் வடமொழிக்குப் புது வரவு என்று காட்டும் சான்றுகள் ஆராய்பவர்க்குக் கிட்டாது போகவில்லை. நாயன் மார்கள், ஆழ்வார்கள் பெயர்கள் சில சமயம் போதிய தமிழறிவில்லாத வடமொழிப் புலவரால் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரதத்தில் பாண்டியன் தலை நகர் மணவூர் என்று கூறப்படுகிறது. உண்மையில் அவ்வூரின் பெயர் மணலூர் ஆகும். தமிழில் ஏட்டெழுத்தில் லகரம் வகரமாகக் காணப்பட்டது. மொழி பெயர்ப்பவர் தமிழறிஞராயிருந்தால் இத்தகைய சிறு தவறுகளுக்கு இடமிராது.

இன்னுமொரு சிறு சுவைதரும் உண்மை இலக்கிய அறிவு தெற்கினின் றும் வடக்கே சென்றதென்பதை வலியுறுத்தும். தமிழில் செயற்பாட்டுவினை படு, பெறு, உண் என்ற மூன்று பகுதிகளின் சேர்க்கையால் பெறப்படும். அடிக்கப் பட்டான், அடிக்கப்பெற்றான், அடியுண்டான் எல்லாம் ஒரே பொருள். நோய்வாய்ப் படுவதையும் இதேபோல் நோயுண்டான் என்பது வழக்கம். தமிழர் செடிகளின் நோய்க்குப் புதுமையான பெயர்