வளரும் தமிழ்
[127
கொடுத்துள்ளனர். தேங்காயின் நோய் தேரை: விளாங்காயின் நோய் ஆனை: தொடராக வரும்போது தேரையுண்ட தேங்காய் என்று வருவதனால் தேரை என்ற உயிரினம் தேங்காயை உண்டது என்ற மயக்கம் ஏற்படுகிறது. பண்டைத் தமிழர் இது வெறும் மயக்கம் என்பதை அறிந்திருந்தனர் என்பதை நாலடியாரில் "தேங்காயுண்ணாத தேரைக்கு உண்ட குற்றம் ஏற்படுவதுபோல" என வரும் குறிப்பினால் காணலாம். வடமொழி யாளரும் அவர்களைப் பின்பற்றிய எல்லாப் பிற மொழியாளரும் தமிழின் இத் தனிச்சிறப்பு அறியாது அதனை மொழிபெயர்த்து உலகிலில்லாத ஒரு செய்தியை உள்ளதாகக் கருதி மயங்கினர்.
தமிழரின் பண்டைய வரன்முறை உரிமை தாய்வழியில் என்பது அறிஞர் முடிவு. இன்று வரை அது மலையாளத்திலும் பழந்தமிழ் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த வங்கக்கடல் தீவுகளிலும் நிலைபெற்றுள்ளது. இன்று பொருள் வரன்முறை உரிமை குறிக்கும் தாயபாகம் என்ற சொல்லில் முதற் பகுதியாகிய தாயம்-இப்பழைய உரிமையினை நினைவூட்டுவது. தாய்வழி வரவே தாயம் எனப்பட்டது. இது இன்று சொல்லின் முதற் பொருளிழந்து வடமொழியில் குருட்டுத்தனமாக வழங்கப் பெறுகிறது.
பூசை, பூசி என்ற சொற்கள் பூக் கொண்டு செய்வது, பூசுவது என்ற குறிப்புடையவை என்பர் அறிஞர் கால்டுவெல். இந்நூல் வேத மொழியிலில்லா வழக்கு. பிற ஆரிய இனமொழிகளிலும் ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாயை என்பது உலகத் தத்துவத்தைக் குறிக்கும் சொல். தொடக்கத்தில் உலகம் அழிவது அல்லது திரிவது என்ற உண்மை தோன்ற மாய்-என்ற பகுதியி லிருந்து மாயை, மாய்கை என்ற சொற்கள் எழுந்தன. (இன்றும் இதனை மாயை, மாய்கை என்று எழுதுவது உண்டு) மாயாவாதிகள் இதனைப் பெரு வழக்காக வழங்கி வடமொழிக்குக் கொண்டு சென்றனர். மாய் என்ற பகுதியுடனேயே தொடர்புடைய இன்னும் இரு பகுதிகள் மா, மால் என்பனவாம். இவை கருமை, மயக்கம் என்றும் பொருள் தரும். திருமால் மாயா உருவினன் என்று பாடப் படுவதும், கரிய உருவினன் என்பதும், உமை வடிவினன் எனப்படுவதும் சேர்த்து நோக்கினால் சமய அடிப்படைக் கருத்துடைய இவ்வொப்பு