பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128) ||

மைகள்

அப்பாத்துரையம் - 1

அனைத்தும் தமிழர் கருத்தினின்றும் தமிழ்

மொழியினின்றுமே தோற்றின என்பது விளங்கும்.

உடலில் 72000 நாடிகளுள் 10 தலைமையுடைன என்றும், அவற்றுள்ளும் சிறப்புடையவை. இடைகலை, பின்கலை, சுழிமுனை என்றும் எல்லாவற்றுக்கும் நடுநாயகமானது சுழிமுனை என்றும் கூறப்படும். இவற்றுள் சுழிமுனை உந்திச் சுழிமுதல் நெற்றிமுனை வரை செல்வது. உந்திச்சுழி பிறப்புக்குக் காரணமாகிய அறிதுயில் நிலையையும், நெற்றிமுனை பிறப்பறுக்கக் காரணமான மெய்யறி வையும் உணர்த்தும். எனவே சுழிமுனை என்பதிலுள்ள சுழி-எதனை உணர்த்தும் என்று கண்டோம். இச் சுழியின் வடிவத்தையே ஓங்காரம் என்றும் பிள்ளையார் சுழி என்றும் கொள்கிறோம். மேலும் அறிதுயில் சுழுத்தி எனப்படும். வடமொழியாளர் சுழி முனையை ஸுஷீம்நா என்றும் சுழுத்தியை ஸுஷீப்ரிதி என்றும் திரித்துக்கொண்டனர். புத்தகத்தைத் திருடிக் கொண்டு போனவனுக்கு அதை அறியும் அறிவையுமா திருடிக்கொண்டு போக முடியும்? வடமொழியாளர் ‘ஈயடித்தான் காப்பி'களிடையே சொற்களின் உயிர்கள் போய்விட்டன.

நெடுங்காலமாகத் தமிழரும் இந்தியாவில் பிற தாய் மொழிகள் பேசும் மக்களும் தாய்மொழியிலும் இந்தியப் பழங்குடியினமான தமிழினத்திலும் (நான்காம் ஐந்தாம் வருணத்தவரிடத்திலும்) பற்றுதலின்றி அவ்வின மொழி களைப் பேணாது விட்டதன் பயனாக அவற்றின் சொற்கள் எவை, வட சொற்கள் எவை என்ற வேறுபாடு தெரிவதற்கிடமில்லாம லிருந்தது அந்நிலையில் வடமொழியாளர் தம் இலக்கியத்தில் ஒரு சொல்லை வழங்கிவிட்டால் ஆளில்லாத இடத்தில் அகப்பட்ட தெல்லாம் உடைமை தாம் என்பதுபோல் அது அவர்களுடை தென்று கொள்ளப்பட்டது. பாணினி போன்ற இலக்கண அறிஞர் சொற்களை ஆராய்ந்து சொல் மூலங்கள் தொகுப்புகள் கண்டதுபோல் பிறமொழிகட்கு யாரும் தொகுப்புச் செய்யவில்லை. தமிழில் தொல்காப்பியர் காலம்முதல் மொழி இலக்கணம் ஏற்பட்டபோதிலும் சொல்தொகுப்பு மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. அப்போதும் இலக்கிய வழக்குக்கு வெளியேயுள்ள உலகவழக்குச் சொற்களை யாரும் தொகுக்க