வளரும் தமிழ்
129
முன் வரவில்லை. இந் நாள்வரை எவரும் எண்ணவுமில்லை. இலக்கியமும் சமய சச்சரவுகளால் பெரும் பகுதிகளும் சிதைந்து ஒரு பகுதியே நமக்கு வந்து சேர்ந்துள்ளதனால் ஆராய்ச்சி செய்வோர். நெடுங்காலம் வடமொழியாளர் சொல்லையே மந்திர மொழியாகக் கொண்டு மயங்கினர்.
ன்னும்
யாம் தமிழெனக் கொள்ளும் சொற்கள் பலவற்றை எமக்குத் தோன்றிய காரணங்களுடன் மேலே ஆராய்வோம். தமிழர் ஒருசார்பை-அதிலும் தாய்மொழிக் கெதிரான ஒருசார்பை அகற்றி நேர்மையாக முன் முடிவு எதுவுமின்றி ஆராய ஒருப்பட இவை உதவுமாயின் எம் முயற்சி வீண் முயற்சியன்று என்ற நிறைவு அடைவோம்.
இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் வட சொற்கள் என்றும் லக்ஷியம், லக்ஷணம் என்பவையே அவற்றின் வடமொழி உருவங்கள் என்றும் பலரால் கொள்ளப்பட்ட காலம் உண்டு. இன்றும் பலர் அப்போலி வாதத்தை நம்பக்கூடும். ஆகவே, அவை வடசொற்கள் அல்ல என்று நாம் கொள்வதற்கான காரணங்களை இங்கே விளக்குவோம்.
தமிழில் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் அவை இன்று வழங்கும் பொருள்களிலேயே வரலாற்றுக் கெட்டிய காலந்தொட்டு வழங்கி வந்திருக் கின்றன. இக்கருத்துகளை விளக்க வேறு சொற்கள் வழங்கியதாகவும் தெரிய வில்லை. (இயல், இசை, நாடகம் என்ற மூன்றில் இயல் என்பதை இலக்கியம் எனச் சிலர் தவறாகக் கொள்கின்றனர். இயலில் இலக்கணம் ஒரு பகுதி பகுதி என்பதையும் இசை, நாடகம் ஆகியவற்றுள் இலக்கியமும் உண்டு, இலக்கணமும் உண்டு என்பதையும் கவனித்தல் வேண்டும்.)
தமிழில் இச்சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன வென்றால் இங்கே முன் வேறு சொல் இருந்திருத்தல் வேண்டும். அங்ஙனமில்லாததால் இச் சொற்கள் தமிழில் வழங்கிய சொற்களே. இன்னும், வடமொழியிலிருந்து இச் சொற்கள் வந்தன என்று நிலைநிறுத்த விரும்புவோர் முதலில் அச்சொற்கள் வடமொழியில் வழங்கினவா வழங்குகின்றனவா என்று பார்த்தல் வேண்டும். வட மொழியில் அன்றும் இன்றும் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்களினிடமாக லக்ஷியம், லக்ஷணம் என்ற