பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130) ||

அப்பாத்துரையம் - 1

சொற்கள் வழங்கப்பட்டதேயில்லை. சாஹித்யம், வ்யா கர்ணம் என்ற சொற்களே அவற்றைக் குறிக்கின்றன.

அப்படியாயின் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் பகுதி எது? இலக்கு என்பதேயாம். இதனை இன்றும் தமிழ் நாட்டில் இடம் என்ற பொருளில் செட்டிநாட்டார் வழங்கு கின்றனர். இலகு, இலங்கு என்பன இதன் மூலப் பகுதிகள். செல்லுமிடம் என்ற பொருளில் வழங்கப்பட்டுப் பின் குறிக்கோள், கருத்தியல் குறிக்கோள், பொருள்களில் இச்சொல் வழங்குகிறது. கட்டு என்ற சொல்லிலிருந்து கட்டியம் (கோமாளித்தனம்) அமைந்தது போல் இலக்கு என்பதி லிருந்து குறிப்பு வினை யடியாகப் பிறந்த அம் ஈற்றுப் பண்புப்பெயரே இலக்கியம் ஆகும்.

லக்கணம் என்பது இலக்கு என்ற பகுதியுடன் வண்ணம் என்ற சொல்லின் மூலமாகிய அணம் என்ற பண்புவிகுதி சேர்ந்த சொல். இன்னணம் என்ற தொடரில் இது முழுச் சொல்லாய் வருவது காண்க.

வாழ்க்கைக் குறிக்கோளை எடுத்துக் காட்டும் உறுதி நூல்கள் இலக்கியம். அவற்றின் பண்புகளை ஆராய்வது இலக்கணம். இவ்வளவு தெள்ளிய உயரிய கலைப்பண்புடைய சொற்கள் இலக்கியத்துக்கும் இலக்கணத் துக்கும் எந்தப் புதியமொழியிலும் பழம்மொழியிலும் இல்லை. உண்மையில் பிறமொழிகளில் இவற்றுக்கான சொற்களின் முதற்பொருள் நகைப்புக்கிடமாவன வடமொழியின் இலக்கியம், இலக்கணம் என்பவற்றுக்குச் சரியான சொற்களின் முதற்பொருள் உடனிருத்தல், விளக்கம் என்பனவாம். ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளில் இலக்கியம் என்பது எழுதப்படுவ தென்றும், இலக்கணம் என்பது சொற்பயிற்சி என்றுமே பொருள் படுகின்றன. சொல்லாட்சியில் மட்டுமன்றிப் பொருளாட்சியிலும் இத்தகைய உயர்வுடைய தமிழர் செல்வக் குவைகளை அவற்றை என்றுமறியா மூங்கை மொழியாகிய வடமொழியின் மீது சுமத்தல் என்ன அறியாமை!

இவ்விரு சொற்களோடு தொடர்புடைய சொல் இலக்கம் என்பது, பத்தும் நூறும் எண்ணலளவாயிருந்த காலம் திராவிட மொழிகள் பிரியாத காலம் என எண்ணப்படுகிறது. அதன்பின்