பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[131

ஒருபடி கூட்டி ஒன்பது நூற்றுக்குப் பின் பத்து நூறு ஆகமுடியும் என்ற பொருள்பட ‘ஆய் இறும்’ அல்லது ‘ஆயிறும்' என்ற தொடரே ஆயிரமாயிற்று. பின்னும் கணக்கு வளர்ச்சியும் கணக்கர் வளர்ச்சியும் ஏற்பட்டபின் கிட்டத்தட்ட அதே பொருளில் இலக்கம், கோடி என்ற பொருள் களையும் அமைத்தனர். இலக்கம் என்பது இலக்கு ஆயது என்பது, இன்னும் சிறு செல்வர் ஆயிரத்தையும், பதினாயிரத்தையும் பெருஞ் செல்வர் ஆக விரும்பு வோர் முதற்கண் இலக்க (நூறாயிர) த்தையே இலக்காகக் கொள்ளுதல் காணலாம். கோடி ஒரு தனிமனிதன் செல்வ எல்லையைக் காட்டிற்று. கோடி வகுத்தவர் கொடி கட்டி வாழ்ந்தனர். அக்கொடி கோடியைக் குறித்த சொல்லே யாதலும் கொடிநிலை, கொடுக்கு ஆகிய சொற்களில் அது அப் பொருளில் வருதலும் காணலாம்.

கொடி, கோடி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பகுதி கோடு-கோணு என்பதாம். இதனடியாகப் பிறந்த இரண்டு சொற்கள் கோணம் என்பதும் கோட்டை என்பதும் ஆகும். இவற்றுள் முன்னது வடமொழியில் மட்டுமன்றி ஆரியமொழிகள் பலவற்றுள்ளும் காணப்படும் சொற்களுள் ஒன்று. இரண்டாவது வட மொழியில் அருகலாகவே வழங்குகிறதாயினும் கன்னட, மராட்டிய நாடுகளில் பெருவழக்கமாய் வழங்கிற்று. வரலாற்று மாணவர், பெரும் போர் நிகழ்ந்த இடமாகிய தலைக் கோட்டை யையும் வடஇந்தியத் தனியரசாகிய இராவு கோட்டையையும் கவனிக்க.

வைசியர் என்ற சொல்லும் கருத்தும் வகுப்பும் வடநாட்டைச் சார்ந்தன. அதற்கிணையாகக் கொள்ளப்படும் சொல்லாகிய வணிகர் என்ற சொல்லும் பொருளும் வகுப்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவை. வணிகர் என்ற சொல் வடமொழியில் வழங்கப்படினும் அது வடசொல் அன்று, தமிழ்ச் சொல்லேயாம் என்று காட்டுவோம்.

ஆரியர் இந்தியாவுக்கு வரும்போதும் நெடுநாள் பின்னரும், வாணிகம் செய்திலர். மேலும் கடல் கடந்த வாணிகம் பண்டும் இன்றும் வடநாட்டினரை விடத் தென்னாட்டினராலேயே மிகுதியும் பயின்று வரப்பெறுகிறது. பாண்டியன் சோழன் ஆட்சியில் கடற்றுறைப் பட்டினங்கள் பற்றிக் கேள்விப்படுவது